இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிக்கும் முதல் படத்தின் ஃபர்ஸ்லுக் டீசர் வெளியிடும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து கூல் கேப்டன் என்று பெயரெடுத்த தோனி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். இதனிடையே கடந்த ஆண்டு புதிதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய தோனி அதற்கு தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்று அறிவித்தார்.
இந்த நிறுவனத்தின் சார்பில் முதலில் தமிழ் படம் தயாரிக்க உள்ளதாக அறிவித்த தோனி, அந்த படத்தில் எல.ஜிஎம் என்று பெயரித்துள்ளதாக கூறியிருந்தார். ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி இயக்கி வரும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், 'லவ் டுடே’ நாயகி இவானா, நதியா, யோகி பாபு உட்பட பலர் முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே எல்.ஜி.எம் படத்தின் டிசர் இன்று (ஜூன் 7) மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்று பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் ’எல்ஜிஎம்’ படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை வென்று சாதித்த மகிழ்ச்சியில் உள்ள தோனியின் ரசிகர்கள் அவரின் முதல் தயாரிப்பு திரைப்படம் ’எல்ஜிஎம்’ படத்தின் டீசரை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil