Advertisment
Presenting Partner
Desktop GIF

மகானைப் பற்றி விக்ரம்: ‘துருவுக்கு நடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால்…’

விக்ரம், துருவ், சிம்ரன், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்த மகான் படம் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

author-image
WebDesk
New Update
vikram-dhruv

Dhruv comes with a different understanding of acting says vikram

விக்ரம் நடிகராக மாறி 30 வருடங்கள் ஆகிறது. வரவிருக்கும் மகான் படம் அவரது கேரியரில் 60வது படமாகும். நடிப்பு என்பது பல வருடங்களாக எப்படி பரிணாமம்  அடைந்தது என்பதை விக்ரம் பார்த்திருக்கிறார்.

Advertisment

“சிவாஜி கணேசன் சாரும், திலீப் குமாரும் நடிக்கும் போது மிகவும் டிராமட்டிக்காக இருந்தார்கள். பிறகு கமல்ஹாசன் நடிப்பு மிகவும் நுட்பமாகவும் உண்மையாகவும் மாறியது.

இப்போது அது மேலும் நுணுக்கம் அடைந்துள்ளது.  

10 எண்றதுக்குள்ள படத்துல டைரக்டர் விஜய் மில்டன், ‘சார் நடிக்காதீங்க’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். என் இப்படி சொல்கிறார் என்று நான் பலமுறை யோசித்தேன். அப்போது தான், படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் தொழில்முறை நடிகர்கள் இல்லை என்பதை நான் கண்டுபிடித்தேன்”. அவர்கள் நடிக்கவில்லை. நானும் அவர்களுடன் பரிணமிக்க வேண்டியிருந்தது என்றார் விக்ரம்.

மேலும், தனது மகன் துருவ்’ நடிப்பில் வித்தியாசமான புரிதலுடன் வருவதாகவும், அவனுடன் மகான் படத்தில் பணிபுரிந்தது அவரது வாழ்க்கையில் ஒரு கற்றல் நிகழ்வாக மாறியது என்றும் விக்ரம் குறிப்பிட்டார்.

“ஆரம்பத்தில் துருவுக்கு நடிப்பு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவன் முற்றிலும் வேறொன்றைச் செய்கிறான் என்பதை நான் விரைவில் கண்டுபிடித்தேன். அதை தன்னையும் அறியாமல் செய்கிறான். அவன் நடிப்பை வெளிப்படுத்தும் நுணுக்கம் மிகவும் வித்தியாசமானது.

மற்றவர்கள் சொல்வது போல், குதிரைகளுடன் ஓடவும், வேட்டை நாய்களுடன் வேட்டையாடவும், நான் எனது முந்தைய தலைமுறையையும், தற்போதைய தலைமுறையையும் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன், ”என்று அவர் கூறினார்.

மேலும் விக்ரம்’ முதல் படமான ஆதித்ய வர்மாவில் நடிக்கும் போது துருவ்க்காக எவ்வளவு கவலைப்பட்டேன் என்பதை நினைவு கூர்ந்தார்.  “என்னுடைய முதல் படம் மிஸ் ஆனது. அதனால் துருவ்வுக்கு, முதல் படம் சரியாக வரவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆதித்ய வர்மா படப்பிடிப்பின் போது நான் அவனுடன் எப்போதும் இருந்தேன்.

ஒவ்வொரு முறையும் நான் அவனிடம் ஏதாவது சொல்ல அல்லது அவனுக்கு குறிப்புகளைக் கொடுக்க முயற்சிக்கும் போது, ​​​​துருவ், 'அப்பா, எனக்குத் தெரியும்' என்று கூறினான்.

பிறகு நான் பின்னாடி வந்து, அவன் செய்வதைப் பார்ப்பேன்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், மகான் படத்தின் ஸ்கிரிப்டுடன் தன்னிடம் வந்தபோது, ​​துருவின் தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே துருவுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற யோசனையில் தயக்கம் காட்டினேன். அடுத்த 10 வருடங்களுக்கு துருவுடன் படம் பண்ணக்கூடாது என்று முடிவு செய்திருந்தேன்.

இருப்பினும், கார்த்திக்கின் ஸ்கிரிப்ட் கடந்து செல்ல முடியாத அளவுக்கு நன்றாக இருந்தது. "நான் ஸ்கிரிப்டைக் கேட்டேன், எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. உண்மையில், என்னுடைய கதாபாத்திரத்தை விட, துருவின் கேரக்டரைதான் நான் நேசித்தேன்,” என்றார்.

“கார்த்திக் என்னிடம் சொன்னபோது, ​​துருவின் கதாபாத்திரம் குவியலின் உச்சியில் இருந்தது. நான் அவரிடம், ‘இல்லை, இல்லை, கதையை கொஞ்சம் மாற்றுவோம்’ என்று சொன்னேன். பிறகு, கார்த்திக் அழகான மற்றும் சுவாரசியமான ஒன்றைக் கொண்டு வந்தார்,” என்று அவர் மேலும் கூறினார்.

மகான் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா மற்றும் சனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amazon Prime Vikram Vs Dhruv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment