Adithya Varma Teaser: நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ‘வர்மா’ படத்தில் அறிமுகமாக இருந்தார்.
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் ரீமேக்காக அதனை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். வெளியீட்டிற்கு முன்பு, படத்தில் உடன்பாடு இல்லை எனக்கூறி, திரும்பவும் வேறொரு இயக்குநரை வைத்து இயக்குவதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்தது.
இந்நிலையில் அந்தப் படத்திற்கு ‘ஆதித்ய வர்மா’ எனப் பெயரிடப்பட்டு, துருவ் விக்ரமை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மாற்றப்பட்டனர்.
#AdithyaVarma Official Teaser on June 16th 2019. Stay tuned. ???? @DhruvVikram8 @BanitaSandhu @PriyaAnand @sooriaruna @proyuvraaj @radhanmusic @follow_anbu @DhruvVikramFans @chiyaanCVF @taran_adarsh @e4echennai @cvsarathi @Forumkeralam1 @Forum_Reelz @10gMedia #DhruvVikram pic.twitter.com/YmTfkmwjcr
— E4 Entertainment (@E4Emovies) 14 June 2019
இ4 எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் வரும் 16-ம் தேதி (நாளை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் ரெட்டி படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய கிரிசாய்யா இதனை இயக்கியுள்ளார்.
பனிதா சந்து மற்றும் ப்ரியா ஆனந்த் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
ஏற்கனவே எடுத்து திருப்தியடையாமல் மீண்டும் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் மீது, ரசிகர்கள் ஒருவித எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.