/tamil-ie/media/media_files/uploads/2018/03/a525.jpg)
தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' பட ஷூட்டிங் இன்று நேபாளில் தொடங்கியது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் துருவ் விக்ரமின் புதிய கெட்டப் இன்று வெளியாகியுள்ளது.
சந்தீப் வங்கா என்பவர் இயக்கியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம், தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் இதில் நடித்திருந்தனர். இதில், விஜய் தேவரகொண்டா நடித்த ரோலில் தான் துருவ் நடிக்கிறார்.
நடிகர் விக்ரமுக்கு சினிமாவில் பிரேக் கொடுத்த இயக்குனர் பாலா தான் இப்படத்தையும் இயக்குகிறார். 'வர்மா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் நேபாளில் இன்று துவங்கியுள்ளது. இப்படத்தின் வசனங்களை ராஜு முருகன் எழுதியுள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், இப்படத்திற்கான துருவ் விக்ரமின் கெட்டப் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
#ChiyaanVikram 's son #DhruvVikram 's look for #ArjunReddy Tamil remake #Varma
Currently the shoot is going on in #Nepalpic.twitter.com/IXvwloTY9V
— Ramesh Bala (@rameshlaus) 4 March 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.