பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் கடைசியாக நடித்த படம் 'தில் பெச்சாரா'. பாலிவுட் மட்டுமில்லாமல் உலக ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்த இப்படம் நேற்று ஓடிடியில் ரிலீஸ் ஆனது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, தென் இந்தியாவில் இப்படத்திற்கு மிகப்பெரிய ரீச் கிடைத்துள்ளது. காரணம், ரஜினிகாந்த். இதில், சுஷாந்த் சிங், ரஜினியின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் போன்று ஒரு நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். சுஷாந்த் சிங் பயன்படுத்தும் செல்போன் கவரில் கூட ரஜினியின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார். நான் ரஜினியை வணங்குகிறேன் என்றும் படத்தில் வசனம் பேசுகிறார் சுஷாந்த்.
அதுமட்டுமின்றி, படமும் நன்றாக இருப்பதால், ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக 'தில் பெச்சாரா' இடம் பிடித்துள்ளது.
ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ள சுஷாந்த் இப்போது உயிரோடு இல்லையே என்று சமூக தளங்களில் ரஜினி ரசிகர்கள் பலரும் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். மேலும், படத்தில் ரஜினி குறித்த காட்சிகளும் சமூக தளங்களில் வைரலாகி வருகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/a67-1-297x300.jpg)
இந்தியாவில் சாதனை:
சுஷாந்தின் தில் பெச்சாரா திரைப்படம், இந்தியாவில் OTT பிளாட்ஃபார்மில், முதல் நாளில் அதிக பேர் பார்த்த திரைப்படம் என்றும் சாதனைப் புரிந்துள்ளது.
சுஷாந்த் இறப்புக்கு அதிகம் கூறப்படும் காரணம், அவர் பாலிவுட்காரர்களால் புறக்கணிக்கப்பட்டார் என்பதே. அது உண்மைதானா என்று நமக்கு தெரியாது. உண்மையோ, பொய்யோ தனிமை ஒரு மனிதனை அழித்துவிடும். சுஷாந்த் தனிமையில் இருந்ததே, அவரது தற்கொலைக்கு காரணம் என்று கூறலாம். அன்று, அவரை தனிமையில் விட்டுவிட்டு இன்று போயிட்டீங்களே சுஷாந்த் என்று புலம்புவதால், இனி என்ன நடந்து விடப் போகிறது!!?
அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்!.