கேம் சேஞ்சர் படத்தை எடுத்தது என் தவறு; விஜய் பாலிசி பொக்கிஷம்: வாரிசு தயாரிப்பாளர் ஆதங்கம்!

ரசிகர்ளின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த கேம் சேஞ்சர் படம், வரவேற்பை பெறாமல் படும் தோல்வியை சந்தித்த நிலையில், விஜய் பாலிசி குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியிருக்கிறார்.

ரசிகர்ளின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த கேம் சேஞ்சர் படம், வரவேற்பை பெறாமல் படும் தோல்வியை சந்தித்த நிலையில், விஜய் பாலிசி குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியிருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Dil Raju film producer about Game Changer 2025 Actor vijay policy Tamil News

"நடிகர் விஜய் பின்பற்றும் விதிகள் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷ வாய்ப்பாகும்" என்று தயாரிப்பாளர் தில் ராஜு பேசியிருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. இவர் தயாரித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. அவர் தமிழில் உச்சநட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த வாரிசு படத்தை தயாரித்து இருந்தார். 

Advertisment

இதனைத் தொடர்ந்து, ராம் சரண் கதாநாயகனாக நடித்து பொங்கலை ஒட்டி வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை தயாரித்து இருந்தார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்தை முன்னணி இயக்குநரான ஷங்கர் இயக்க படத்திற்கு தமன் இசையமைத்தார். 

ரசிகர்ளின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த கேம் சேஞ்சர் படம், வரவேற்பை பெறாமல் படும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இது தொடர்பாக சமீபத்திய நேர்காணலில் பேசிய தில் ராஜு "கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தது என்னுடைய தவறு. நான் என் தரப்பில் சில அக்ரீமண்டுகளை போட்டிருக்க வேண்டும். அது என் தவறு தான். இதற்கு அடுத்து அப்படி ஒரு படத்தை தயாரிக்க மாட்டேன். 

நடிகர் விஜய் பின்பற்றும் விதிகள் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷ வாய்ப்பாகும். அவருடைய பாலிசி ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பு, 6 மாதம் ஒரு படத்தில் நடிப்பார். மொத்தம் 120 நாட்களில் திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கும் நிறைய நேரம் கிடைக்கும். ஆனால் இங்கு தெலுங்கு திரையுலகில் அது மொத்தம் சிதைந்து கிடக்கிறது." என்று அவர் கூறியுள்ளார்.

Entertainment News Tamil Actor Vijay Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: