குஷ்ட நோயாளி, 15 வயதில் மூத்த நடிகருடன் திருமணம்; தாயான பின்பும் நீச்சல் உடை அணிந்த இவர் கமல் பட நடிகை: யார் தெரியுமா?

கமல்ஹாசனுடன் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ள இந்த நடிகை அந்த படத்தில் இளவரசி கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். இவர் யார் தெரியுமா?

கமல்ஹாசனுடன் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ள இந்த நடிகை அந்த படத்தில் இளவரசி கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். இவர் யார் தெரியுமா?

author-image
WebDesk
New Update
Dimple kambadi

பொதுவாக திரைப்படங்களில் நடிகர், நடிகைகள், தங்கள் ஏற்றுக்கொண்ட கேரக்டர்களை போலவே, நிஜ வாழ்க்கையும் அமைவதுண்டு. அப்படி ஒரு வாழ்க்கையை அனுபவித்த ஒரு நடிகை கமல்ஹாசனுடன் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார். அந்த நடிகை பெயர் டிம்பிள் கபாடியா.

Advertisment

பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜ்கபூர் 1973-ம் ஆணடு இயக்கிய 'பாபி' (Bobby) என்ற படத்தில், அவரது மகன் ரிஷி கபூருக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் தான் டிம்பிள் கபாடியா. இவர் திரைத்துறையில் அறிமுகம் ஆகும்போது அவருக்கு வயது 15. திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் மூலம் ஒரே இரவில் நட்சத்திரமாக மின்னினார். அப்போது அவர் தனது தந்தை, சுன்னிபாய் கபாடியாவுக்கு திரைத்துறையில் பல பிரபலங்களுடன் தொடர்பு இருந்தது என்று தெரிவித்தார்.

rishi-kapoor-bobby-film

12 வயதில் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதன்பிறகு தான் பாபி படத்தில் நடித்துள்ளார். ஆனால், 15 வயதில் தன்னை விட 15 வயது மூத்தவரான (30 வயது) ராஜேஷ் கன்னாவைத் திருமணம் செய்து, ஒரு அசாதாரண முடிவை எடுத்தார். “தான் ராஜேஷ் கன்னாவின் தீவிர ரசிகை என்றும், விமானத்தில் அவரைச் சந்தித்தபோது திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்ததாகவும் கூறியிருந்தார். திருமணத்திற்குப் பிறகு, டிம்பிள் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.

Advertisment
Advertisements

1970-களின் பிற்பகுதியிலும், 1980-களின் முற்பகுதியிலும் ராஜேஷ் கன்னாவின் நட்சத்திர அந்தஸ்து குறைய தொடங்கியபோது, அவர்களின் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் போராடின, தோல்வியைச் சமாளிப்பது அவருக்கு கடினமாக இருந்தது. இது அவர்களின் திருமண வாழ்க்கையை பாதித்தது. உறவைச் சீராக்க முயற்சி செய்தும் முடியாமல், 1984-இல் டிம்பிள், ராஜேஷ் கன்னாவை அவரது மும்பை பங்களாவில் தனியாக விட்டுச் சென்றார்.

rajesh-khanna-dimple-kapadia_1600_express-archives

1994-இல், பிரீடிஷ் நந்தியுடனான ஒரு நேர்காணலில் பேசிய டிம்பிள், ராஜேஷ் கன்னாவைத் திருமணம் செய்துகொண்டது தவறான முடிவு என்று ஒப்புக்கொண்டார். ராஜேஷ் கன்னாவிடமிருந்து பிரிந்த பிறகு, டிம்பிள் 25 வயதில் ரமேஷ் சிப்பியின் 'சாகர்' (Saagar) திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் தனது முதல் பட நாயகனான ரிஷி கபூருக்கு ஜோடியாக நடித்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தாலும், நீச்சல் உடையில் நடித்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

‘பாபி’ வெளியான பிறகு, டிம்பிள் மற்றும் ரிஷி கபூர் இடையேயான உறவு பற்றிய வதந்திகள் பரவின. ‘சாகர்’ படத்தில் அவர்கள் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்த பிறகு, மீண்டும் வதந்திகள் அதிகரிக்கத் தொடங்கின. ரீ-என்ட்ரி கொடுத்த பிறகு, டிம்பிள் கபாடியா தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு, இன்றும் தனது சக்திவாய்ந்த நடிப்பின் மூலம் மக்களைக் கவர்ந்து வருகிறார். பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள டிம்பிள் கபாடியா, தமிழில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இளவரசி கேரக்டரில் நடித்திருப்பார். இதுதான் அவர் தமிழில் நடித்த ஒரு படம். 

Tamil Cinema News tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: