பட்டிமன்றம் நடத்துவதற்காக மலேசிய சென்றிருந்த திண்டுக்கல் ஐ லியோனி தலைமையிலான குழுவினர் குறித்த நேரத்தில் பட்டிமன்றத்தை நடத்தாததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் லியோனிக்கும் இடுய கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாடநூல்க கழக தலைவரும் பட்மன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பல்வேறு பட்டிமன்றங்களுக்கு நடுவராக செயல்பட்டுள்ளார். மேலும் அரசியல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வரும் லியோனி வெளிநாடுகளுக்கு சென்ற பட்டிமன்றம் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், சமீபத்தில் லியோனி தனது குழுவினருடன் பட்மன்றம் நடத்துவதற்காக மலேசியாவிற்கு சென்றுள்ளார். இதற்காக ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே மாதம் முதல் வாரம் வரை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகளுக்காக டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்று தீர்ந்துள்ளன, 4 நாட்கள் நிகழ்ச்சிக்காக வந்த லியோனி தனது குழுவினருடன் முதல் 3 நாட்கள் நிகழ்ச்சிகளை சரியான நடத்தியுள்ளார்.
இதன்பிறகு 4-வது மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சியின்போது நிகழ்ச்சி தொடங்கும் நேரம் என்று குறித்த நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கவில்லை. 3 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் நிகழ்ச்சி தொடங்காததால் பொறுமை இழந்த ரசிகர்கள், எங்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்ப கொடுக்கப்பட வேண்டும் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடுமையாக வாக்குவாதம் நடத்தியுள்ளனர்.
வாக்குவாதம் செய்த ரசிகர்களில் பலர் அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், மீதமிருந்த சிலர் லியோனி மற்றும் அவரது குழுவினர் வந்தவுடன் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அதன்பிறகு சமாதானப்படுத்தி நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், நிகழ்ச்சி தாமதத்திற்கு லியோனியும் அவரது குழுவும் தான் காரணம் என்று சொல்ல தொடங்கிவிட்டனர்.
மேலும் நிகழ்ச்சி குறித்து கவலைப்படாமல் லியோனி ஹோட்டலி அறையில் ஓய்வில் இருந்தார் என்றும் கூறியுள்ளனர். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஒரு கட்டத்தில் லியோனியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியில் சென்றவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகு நிகழ்ச்சி நடந்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி நடத்த சென்ற இடத்தில் வாக்குவாதம் நடைபெற்றது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“