scorecardresearch

இயக்குனர் விஜய் தம்பதிக்கு குழந்தை பிறந்தது – பிரபலங்கள் வாழ்த்து

Director A L Vijay : மே 30 ம்தேதி, காலை 11.25 மணிக்கு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஐஸ்வர்யா. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தான் பிரசவம் நடந்துள்ளது. தாய் மற்றும் சேய் இருவரும் நலமுடன் இருக்கின்றனர்.

Director A L Vijay, baby, kreedam, ajith, amala paul, marriage, vijay, thalaiva, deivathirumagal, baby sara, Director Vijay, Director, Baby, Aishwarya, A.L.Vijay
Director A L Vijay, baby, kreedam, ajith, amala paul, marriage, vijay, thalaiva, deivathirumagal, baby sara, Director Vijay, Director, Baby, Aishwarya, A.L.Vijay

இயக்குனர் ஏ எல் விஜய் – ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரபலங்கள், இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2007ல் வெளிவந்த கிரீடம் படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ஏ.எல்.விஜய். அவர் அதற்கு பிறகு மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், விஜய் நடிப்பில் தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

‘தெய்வத் திருமகள்’ படத்துக்காக தமிழக அரசின் இரண்டு விருதுகள் கிடைத்தன. தெய்வத்திருமகள், தலைவா படங்களில் நடித்த நடிகை அமலாபாலுக்கும், இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஒருவழியாக, 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தார் விஜய். அந்த வருடம் ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது.
ஆனால், இந்தத் திருமண உறவு இரண்டு வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து, 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவாகரத்து பெற்றனர்.

இயக்குனர் ஏ எல் விஜய்க்கும், டாக்டர் ஐஸ்வர்யா என்பவருக்கும் 2019 ஜூலை 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இது விஜய்க்கு இரண்டாவது திருமணம். தற்போது விஜய்-ஐஸ்வர்யா ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.

மே 30 ம்தேதி, காலை 11.25 மணிக்கு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஐஸ்வர்யா. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தான் பிரசவம் நடந்துள்ளது. தாய் மற்றும் சேய் இருவரும் நலமுடன் இருக்கின்றனர்.

இதை இயக்குனர் விஜய்யின் அண்ணன் உதயா டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “ஆம்.. நான் இப்போ பெரியப்பா ஆகிவிட்டேன். தம்பி இயக்குனர் விஜய் மற்றும் ஐஸ்வர்யா விஜய்க்கு ஆண் குழந்தை இன்று 11.25 மணிக்கு பிறந்துள்ளது. மகிழ்ச்சி.. அதிக மகிழ்ச்சியில் இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார் அவர்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் வாழ்த்து

இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி என்ற படத்தினை இயக்கி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம். இதில் பாலிவுட் நடிகை கங்கனா தான் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். அதற்காக அவர் பரதநாட்டியம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுள்ளார். மேலும் தமிழில் பேசவும் பயிற்சி எடுத்து வந்தார்

எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அவர் எம்ஜிஆர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அதிகம் வைரலாகி இருந்தது என்பது குறிப்பிடத்ததக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Director a l vijay baby kreedam ajith amala paul marriage vijay thalaiva