/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-2019-06-30T091841.461.jpg)
director a.l.vijay, amala paul, ajith, vijay, re-marriage, kreedam, thalaiva, deivathirumagal, doctor aishwarya, இயக்குனர் ஏ.எல். விஜய், அமலாபால், அஜித், விஜய் மறுமணம், கிரீடம், விவகாரத்து, தலைவா, தெய்வத்திருமகள், டாக்டர் ஐஸ்வர்யா
தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.எல். விஜய், அமலா பால் உடனான திருமண வாழ்க்கை, விவாகரத்தில் முடிந்த நிலையில், விரைவில், டாக்டர்.ஐஸ்வர்யாவை கரம்பிடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திரைப்படத் துறையில் பெரும் ஆர்வம் கொண்ட விஜய் ஆரம்ப காலகட்டங்களில் விளம்பரப் படங்கள் எடுத்து வந்தார். கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை எடுத்திருக்கிறார். 2009 ஆம் அதற்காக சிறந்த கார்ப்பரேட் விளம்பர இயக்குநர் விருதைப் பெற்றார்.
2007 ஆம் ஆண்டு முதன் முதலில் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே யார் கூட தெரியுமா? நம்ம தல அஜித்த வெச்சு தான் பண்ணாரு. இயக்கிய படங்கள் கிரீடம் படத்தை அடுத்து பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
தெய்வத் திருமகள் படத்தை எடுத்துக் கொண்டிருந்த வேளையில் அதில் நடித்த அமலா பால் மீது இவருக்கு காதல் ஏற்பட்டது. பிறகு 2014 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில ஆண்டுகளில் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
ஐஸ்வர்யா உடனான திருமணம் குறித்து ஏ.எல். விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை..
From the desk of Director #Vijay on his Wedding with Dr. R. Aishwarya. @DoneChannel1pic.twitter.com/L5LvHAIejy
— Done Channel (@DoneChannel1) 29 June 2019
தற்போது விஜய்யே தன்னுடைய இரண்டாவது திருமணத்தைப் பற்றி அவரே சொல்லியிருக்கிறார். தான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா என்றும் அவர் ஒரு எம்பிபிஎஸ் டாக்டர் என்றும் அறிவித்திருக்கிறார். அவருடைய திருமணம் ஜூலை இரண்டாம் வாரத்தில் திருமணம் நடக்க இருக்கப் போவதாகவும் இது முழுக்க முழுக்க குடும்ப விழாவாக நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் விஜய்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.