/tamil-ie/media/media_files/uploads/2020/02/Sharook-Kapoor-dies-at-23.jpg)
Sharook Kapoor dies at 23
Raj Kapoor : நடிகர் பிரபு, கனகாவின் நடிப்பில் 1991-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தாலாட்டு கேட்குதம்மா’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ் கபூர். இவரது இயற்பெயர் சாகுல் ஹமீது. நடிகர் அஜித்தின் ‘அவள் வருவாளா?’, ‘ஆனந்த பூங்காற்றே’ உட்பட 15-க்கும் அதிகமான படங்களை இயக்கியவர்.
அயோத்தி ராமர் கோவில் முஸ்லீம்களின் கல்லறைகள் மீதா கட்டப்படும்? அறக்கட்டளைக்கு கடிதம்!
சன் டிவி-யில் ‘நந்தினி’ (முதல் பாகம்), ’ராசாத்தி’ (முதல் 28 எபிசோட்), ரன் ஆகிய சீரியல்களின் இயக்குநரும் இவர் தான். ’ஆறு’, ’மாயாண்டி குடும்பத்தார், ‘முத்துக்கு முத்தாக’ உட்பட நிறைய படங்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்துள்ளார். ராஜ் கபூருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும், ஷாரூக் கபூர் என்ற ஒரு மகனும், ஷமீமா கபூர், ஷானியா கபூர் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் 23 வயதாகும் ஷாரூக் கபூருக்கு கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது உடல்நிலை சரியானால் மெக்காவுக்கு வருவதாக வேண்டிக் கொண்டார்களாம்.
இன்றைய செய்திகள் Live : நெற்றிக்கண் பட உரிமையை தனுஷிற்கு விற்கவில்லை – கவிதாலயா விளக்கம்
அதன்படி தனது தாயார் ஷஜீலாவுடன் மெக்காவுக்கு சென்றிருக்கிறார் ஷாரூக். அங்கு தட்ப வெப்ப நிலை சீதோஷணம் காரணமாக சளி அதிகமாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அங்கேயே மரணமடைந்துள்ளார். இளம் வயதில் மகனின் மரணம் ராஜ் கபூரின் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புனிதப் பயணம் சென்ற இடத்தில் உயிரிழந்த ஷாருக் கபூரின் உடலை அங்கேயே நல்லடக்கம் செய்யவிருப்பதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.