Advertisment

ரஜினி- கமலை சந்தித்தால்..? பிரபல இயக்குனர் மெகா திட்டம்

நான் ரஜினி சார் அல்லது கமல் சாரை நேரில் சந்தித்தால், அவர்கள் இருவரும் என்னிடம் உள்ள ஸ்கிரிப்ட்களில் ஆர்வம் காட்டுவார்கள்.

author-image
WebDesk
New Update
ரஜினி- கமலை சந்தித்தால்..? பிரபல இயக்குனர் மெகா திட்டம்

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த உலகநாயகன் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் ஆரம்பகாலகட்டத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். இதில் கடைசியாக கடந்த 1979-ம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு இருவரும் தனி ஹீரோவாக பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறிவிட்டனர்

Advertisment

ஆனால் இந்த 40 ஆண்டுகாலத்தில் ரஜினி கமல் இருவரையும் இணைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க பல இயக்குநர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த முயற்சி தற்போதுவரை கைகூடாமல் இருந்து வருகிறது. ஆனால் தற்போது பிரபல மலையாள இயக்குநர் இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேரம் படத்தின் மூலம் இயக்குநராகி அதன்பிறகு ப்ரேமம் என்ற மெகாஹிட் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்,  ரஜினி மற்றும் கமலுக்காக தனித்தனியாக ஸ்கிரிப்ட்களை வைத்திருப்பதாகவும், அவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்கவும் ஒரு ஸ்கிரிப்ட் இருப்பதாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்..

அவர் எழுதியுள்ள பதிவில் “நான் ரஜினி சார் அல்லது கமல் சாரை நேரில் சந்தித்தால், அவர்கள் இருவரும் என்னிடம் உள்ள ஸ்கிரிப்ட்களில் ஆர்வம் காட்டுவார்கள். லக் அதன் அகராதியில் எனது பெயர் இல்லை என்று நான் நம்புகிறேன். எனவே, என் வாழ்க்கையில் இப்போது வரை நான் அவர்களை சந்தித்ததில்லை. எதிர்காலத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருந்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்,

அவர்கள் எனது ஸ்கிரிப்ட்களை விரும்பினால், நான் எனது பல திறன்களைப் பயன்படுத்துவேன், மேலும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களைச் செய்வேன், என்று எழுதியுள்ளார்.

ஸ்கிரிப்ட்களை விவரிக்க அல்போன்ஸ் புவரனுக்கு ஒரு ஆதரவளிக்கும் வகையில் கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் நெருக்கமான வட்டங்களுக்கு ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். தெரிந்தவர்கள் இது நிச்சயமாக ஒரு புதிய காம்போவாக இருக்கும் என்றும் பார்வையாளர்களுக்கும் புதிதாக ஒன்றைக் கொடுக்கும் என்று கூறி வருகின்றனர்.

அல்போன்ஸ் புத்திரன் தற்போது ஃபஹாத் பாசில் மற்றும் நயந்தாரா நடித்த 'பாட்டு' படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் தனது அடுத்த திரைப்படமான நெல்சன் திலிப்குமார் இயக்கும் தனது 169' படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கமலின் 'விக்ரம்'  படம் வரும் –ஜூன் 3 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Kamal Haasan Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment