பிரபல இயக்குனர் அனுமோகன், தனது ஆரம்பகால திரைத்துறை அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, நடிகர் சிவகுமார் தனக்கு அளித்த ஒரு முக்கிய அறிவுரையை அவர் நினைவு கூர்ந்தார். இது அனுமோகனின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததாகவும் திரைமொழிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
அனுமோகன் தனது ஆரம்பகால திரைத்துறை வாழ்க்கையில், ஒரு இயக்குனராக வாய்ப்பு தேடியபோது, நடிகர் சிவகுமாரைச் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். அப்போது சிவகுமார், அனுமோகனுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அனுமோகன் இயக்கத்தில் சிவக்குமார் நடிப்பில் உருவான 'மேட்டுப்பட்டி மிராசு' (1994) திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் அனுமோகன் கதை சொல்ல செல்லும்போது சிவகுமார் அளித்த ஒரு முக்கிய அறிவுரை குறித்து பகிர்ந்து கொண்டார்.
அனுமோகன் முதன்முதலில் சிவகுமாரிடம் கதை சொல்ல சென்று இருக்கிறார். அப்போது, அனுமோகன் தாடி வைத்திருந்திருக்கிறார். இதைப் பார்த்த சிவகுமார், "என்ன தம்பி கதை சொல்லணும்? எதுக்கு தாடி விட்டுருக்க? ஷேவ் பண்றதுக்கே உனக்கு நேரம் இல்லன்னா, சோம்பேறித்தனமா இருந்தா எப்படி எதிர்காலத்துல டைரக்டர் ஆவ?" என்று கேட்டிருக்கிறார். மேலும், "ஒருத்தரை பார்க்கும்போது ஃப்ரெஷ்ஷா, அழகா போகணும். தாடி விட்டு பிச்சைக்காரன் மாதிரி போறியே!" என்று கண்டித்திருக்கிறார்.
இந்த வார்த்தைகள் அனுமோகனின் மனதை மிகவும் பாதித்தன. அன்று முதல் இன்று வரை, அவர் தாடி வைத்ததே இல்லை என்று குறிப்பிடுகிறார். சிவகுமாரின் இந்த அறிவுரை, அனுமோகன் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
சிவகுமார் மேலும் கூறுகையில், "ஒருவரைப் பார்த்தவுடன், அவர் முகத்தைப் பார்த்தவுடன் ஒரு பிரியம் வர வேண்டும். தாடி விட்டு போய் நின்றால், பஞ்சம் பிழைக்க வந்தவன் மாதிரியே இருக்கும்" என்றும் கூறியதாக அனுமோகன் குறிப்பிட்டார். அனுமோகனுக்கு இந்த அனுபவம், திரைத்துறையில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் தனிப்பட்ட தோற்றத்திற்கும், ஒழுக்கத்திற்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவமாக அமைந்ததாம்.
தாடி வச்சி இருந்தாலே அவன் சோம்பேறி தான் | Anu Mohan interview For More Content Subscribe To Our YouTube Channel :...
Posted by ThiraiMozhi on Wednesday, May 14, 2025