/tamil-ie/media/media_files/uploads/2022/03/Bala-1.jpg)
Director Bala and his wife Muthu malar get divorced
இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர்’ மார்ச் 5 அன்று குடும்பநல நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றனர். இருவரும் நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலாவும், மலரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த தம்பதிக்கு பிரார்த்தனா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.
தொழில்ரீதியாக, இயக்குனர் பாலா’ நடிகர் சூர்யாவுடன் தனது வரவிருக்கும் படத்திற்கு தயாராகி வருகிறார்.
இருப்பினும், தனிப்பட்ட முறையில், பிரிவு மற்றும் விவாகரத்து மூலம் பாலா’ கடினமான காலங்களைச் சந்தித்ததாகத் தெரிகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/Bala.jpg)
இயக்குனர் பாலாவுக்கும், மலருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்தனர். பாலா தனது வேலையில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோது, மலர் அடிக்கடி ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, பாடகி சைந்தவி மற்றும் அவரது தொழில்துறையைச் சேர்ந்த தோழிகளுடன் இருப்பதை காண முடிந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/Bala-2.jpg)
இறுதியில் இயக்குனர் பாலாவும், மலரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். மார்ச் 5 ஆம் தேதி, குடும்ப நீதிமன்றத்தில் அவர்களது விவாகரத்து நடந்தது.
இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும்’ ஜூலை 5, 2004 அன்று மதுரையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. 17 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு’ அவர்கள் அதை விட்டு வெளியேற முடிவு செய்து, விவகாரத்து பெற்றனர்.
பாலா-மலரின் விவாகரத்து குறித்த செய்தி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.