Director Bala and his wife Muthu malar who attended the same wedding after the divorce
இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர்’ மார்ச் 5 அன்று குடும்பநல நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றனர்.
Advertisment
இயக்குனர் பாலாவுக்கும், மலருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்தனர். பாலா தனது வேலையில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோது, மலர் அடிக்கடி ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, பாடகி சைந்தவி மற்றும் அவரது தொழில்துறையைச் சேர்ந்த தோழிகளுடன் இருப்பதை காண முடிந்தது. இறுதியில் இயக்குனர் பாலாவும், மலரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். மார்ச் 5 ஆம் தேதி, குடும்ப நீதிமன்றத்தில் அவர்களது விவாகரத்து நடந்தது.
இந்த தம்பதிக்கு பிரார்த்தனா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.
Advertisment
Advertisements
தொழில்ரீதியாக, இயக்குனர் பாலா’ நடிகர் சூர்யாவுடன் தனது வரவிருக்கும் படத்திற்கு தயாராகி வருகிறார்.
இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும்’ ஜூலை 5, 2004 அன்று மதுரையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. 17 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு’ அவர்கள் அதை விட்டு வெளியேற முடிவு செய்து, விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும் திமுக பிரமுகர் மருத்துவர் மகேந்திரனின் மகன் கீர்த்தனுக்கும் திருமணம் நடந்தது. இந்த விழாவில்’ அரசியல், சினிமாவைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இயக்குனர் பாலாவும் இந்த திருமணத்துக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அதே திருமண விழாவுக்கு பாலாவின் மனைவி முத்துமலரும்’ தனது மகள் பிரார்த்தனாவுடன் கலந்து கொண்டார்.
&t=27s
இந்நிலையில் திருமணத்தில் தந்தையை பார்த்த, பிரார்த்தனா’ பாலாவின் மடியில் சென்று அமர்ந்திருக்கும் வீடியோ, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
(இந்த பிங்கோ பாக்ஸ் எனும் யூடியூப் சேனலில் இருந்து எடுக்கப்பட்டது!)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “