மறைந்த’ ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகம் ஏலத்திற்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அபிராமிபுரத்தில் உள்ள இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு சொந்தமான 2 பிளாட்டுகள் ஏலம் விடப்படுவதாக யூசிஓ வங்கி அறிவித்துள்ளது. யூசிஓ வங்கியில் பெற்ற ரூ.1.36 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் பிளாட்டுகள் ஏலம் விடப்படுகின்றன என்று வங்கி அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
பாலச்சந்தரின் மனைவி பெயரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு அலுவலகமும், அவரது மகள் பெயரில் உள்ள குடியிருப்பு அலுவலகமும் 1 கோடியே 36 லட்ச ரூபாய் கடனை திரும்ப செலுத்தாததால் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பாகவே படத் தயாரிப்பு, தொலைக்காட்சி தயாரிப்பு போன்றவற்றை நிறுத்திவிட்டனர். இந்த நிலையில், அவரது வீடும் அலுவலகமும் ஏலத்திற்கு வந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.