தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தென்மாவட்டமாக தேனியை சேர்ந்த பாரதிராஜா கடந்த 1977-ம் ஆண்டு ரஜினி கமல் நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள். டிக் டிக் டிக். புதிய வார்ப்புகள். கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்கயை இயக்கியுள்ளார்.
கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு வெளியான மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்கியிருந்தார். ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரார் ஆவார்.
தொடர்ந்து நடிகரானவும் பல படங்களில் நடித்துள்ள பாரதிராஜா, ஆயுத எழுத்து படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன்பிறகு ரெட்டசுழி, குரங்கு பொம்பை, பாண்டியநாடு, நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷின் தாத்தாவாக நடித்திருந்த பாரதிராஜா நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த நிலையில், விமான நிலைய வளாகத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர். தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவரது பிஸியான ஷெட்யூல் மற்றும் பயண அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநரான பாரதிராஜா பல நட்சத்திரங்களுடன் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ள நிலையில், ராதிகா, நிழல்கள் ரவி, மனோஜ் என பல திறமையான புதுமுக நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுளளார். மேலும் பாக்யராஜ், மணிவண்ணன். சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பல இயக்குநர்களையும் உருவாக்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“