scorecardresearch

பாரதிராஜாவின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம்; தனியார் மருத்துவமனை அறிக்கை

இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் உள்ளது என தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியீடு

Director bharathi raja admitted Pvt hospital in Chennai
இயக்குனர் பாரதி ராஜா

Director Bharathiraja Health status: இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் உள்ளது என தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனரான பாரதிராஜா, கடந்த 24ஆம் தேதி, திடீர் உடலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இதையும் படியுங்கள்: மீண்டும் ரெட் கார்டு கொடுத்த ராதிகா… ஆனா கோபி என்னென்ன சொல்றார் பாருங்க

பின்னர் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின்படி, பாரதிராஜா சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.எம் மருத்துவமனை, பாரதிராஜாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் உடல் நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்ட அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அவர் உடல்நிலை நல்ல நிலையில் சீராக இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மருத்துவமனை மற்றொரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுவருகிறது. தீவிர பிரிவில் அவருக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Director bharathiraja health status