சத்யராஜை முதல்முறை பார்த்தபோது அவரை ஹீரோவாக ஏற்க மறுத்ததாக என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
1978-ம் ஆண்டு வெளியான சட்டம் என் கையில் படத்தின் மூலம் நடிகராக திரைத்துறையில் அறிமுகமானவர் சத்யராஜ். அதனைத் தொடர்ந்து பல படங்களில் பல முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் நடித்து வந்த சத்யராஜ் ஒரு கட்டத்தில் முக்கிய வில்லன் நடிகராக நடித்து வந்தார். அதன்பிறகு 1986-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்
அதன்பிறகு ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சத்யராஜ் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். இதனிடையே அறிமுகம் முதல் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், பல போராட்டத்திற்கு பிறகே ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அதேபோல் சத்யராஜ் நடித்த வேதம் புதிது படம் அவர் திரை வாழ்வில் பெரி மைல் கல்லாக அமைந்தது.
இந்த படம் குறித்து வீடியோ மூலம் பகிர்ந்துகொண்டுள்ள படத்தின் இயக்குனர் பாரதி ராஜா முதல் முறை சத்யராஜ் தன்னிடம் வநதபோது தான் எவ்வாறு நடந்துகொண்டேன் என்பதை கூறியுள்ளார். கோயம்புத்தூரை சேர்த்த புரோடக்ஷன் மேனேஜர் ஒருவர் சத்யராஜை என்னிட்டம் அழைத்து வந்தார். பையன் ஹீரோவா நடிக்க வேண்டும் என்று சொல்கிறார் என்று அவர் என்னிடம் சொன்னார்.
நான் அவரை பார்த்தேன். திடக்காத்திரமாக உடம்பு அளவுக்கு அதிகமான உயரம் பல்லு வேற கொஞ்சம் எடுப்பா இருக்கும். இந்த ஆளு ஃபைட்டிங்கத்தான் லாய்க்கு ஆன ஹீரோவா நடிக்கனும்கிறா என்று என் உதவி இயக்குனர்களிடம் சொன்னேன். ஆனால் நாட்கள் சொல்ல செல்ல அவனிடம் எதோ இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன். சத்யராஜூவுக்கு தமிழ் மீது பற்று அதிகம். அவருக்குள் இருக்கும் திறனை வைத்துதான் கடலோர கவிதைகள் படத்தில் நாயகனாக்கினேன்.
இந்த படத்தில் நடித்தபோது கூட சார் என்ன சார் என் உயரத்திற்கு லவ் பண்ண சொல்றீங்களே என்று கேட்டார். ஒருவழியாக அவரிடம் பேசி சம்பதிக்க வைத்து படத்தை எடுத்தோம் என்று கூறியுள்ளார். சத்யராஜின் கடலோர கவிதைகள் படம் அவரின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“