scorecardresearch

பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றம்: குடும்பத்தினர்- வைரமுத்து ஏற்பாடு

இயக்குனர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக தற்போது எம்.ஜி.எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Director Bharathiraja
இயக்குனர் பாரதிராஜா

தமிழின் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தவாக நடித்திருந்தார். சமீபத்தில் மதுரையில் நடந்த விருமன் பட இசை வெளியீட்டு விழாவிலும் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார்.

இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி, பாரதிராஜா திடீர் உடலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மருத்துவர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் எம்.ஜி.எம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ராஜகோபால் மேற்பார்வையில், பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக இன்று மதியம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதற்கான ஏற்பாட்டினை பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏ.சி .சண்முகம் செய்ததாக தெரிகிறது.

இதற்கிடைய, பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டி, சினிமா பிரபலங்களும், அவரது நண்பர்களும், தமிழ் ரசிகர்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Director bharathiraja shifted to mgm hospital for further treatment