Advertisment
Presenting Partner
Desktop GIF

இயக்குனர் சேரன் மகள் திருமணம்... நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்

சேரன் மகள் திருமணத்துக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
cheran daughter 1

இயக்குனர் சேரனின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு திங்கள்கிழமை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இயக்குனர் சேரனின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு திங்கள்கிழமை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. சேரன் மகள் திருமணத்துக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமா உலகில் பிரலபலங்களின் வீட்டில் தை மாதத்தில் இருந்தே திருமண விழாக்கள் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜயகுமார் பேத்தியின் திருமணம், நடிகர் ரோபோ சங்கர் மகளின் திருமணம், இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. 

cheran

அந்த வரிசையில் இயக்குனர் சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு சுரேஷ் ஆதித்யா என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. சேரன் மகளின் திருமணத்தில், சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இயக்குனர் சேரன் மகளின் திருமணத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல, இயக்குனர் சமுத்திரகனி நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். அதே போல, தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜா நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். 

cheran daughter wedding

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இயக்குனர் சேரன், அவருடைய மனைவியின் பெயர் செல்வராணி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினி. இரண்டாவது மகள் பெயர் தாமினி.  இப்போது மூத்த மகள் நிவேதாவின் திருமணம் நடைபெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார் இயக்குனர் சேரன். இவர் எழுதி இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சேரன் மகள் திருமண விழாவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் சேரன் மகள் நிவேதா பிரியதர்ஷினி திருமணத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cheran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment