Advertisment
Presenting Partner
Desktop GIF

கவின் - லாஸ்லியா பேரு இனி என் நாக்குல வராது: சூடான சேரன்

கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை. அவசியமுமில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cheran Bigg Boss, kavin, losliya

Cheran Bigg Boss

Director Cheran: தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான கதைகளை இயக்கி, ஃபேமிலி ஆடியன்ஸின் மனதில் ஆழமாக பதிந்தவர் இயக்குநர் சேரன். குடும்ப செண்டிமெண்டுகளுக்கு இணையாக காமெடியும் சேரனின் படங்களில் தூக்கலாக இருக்கும். ”பாரதி கண்ணம்மா”, “பொற்காலம்”, “தேசிய கீதம்”, “வெற்றிக்கொடி கட்டு” என தனது தொடக்க கால படங்களில் காமெடியையும் - செண்டிமெண்டையும் சரிசமமாக வைத்த சேரன், பின்னர் முழு குடும்ப சினிமாவிற்கு மாறினார்.

Advertisment

தான் இயக்கும் படங்களோடு, மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக இயக்குநர் மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த சேரனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் தமிழ் 3’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார் சேரன்.

வீட்டிலிருந்த அனைவருடனும் இணக்கமாக இருந்த அவர், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவை மகள் போல் பாவித்தார். லாஸ்லியாவும் சேரனை, ‘சேரப்பா’ என்றே அழைத்து வந்தார். இந்நிலையில், அந்நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளர் கவினுடன் நெருக்கமானார் லாஸ்லியா. அப்போது கரியரில் கவனம் செலுத்தும்படி, தன் மகளுக்கு அறிவுரை கூறினார் சேரன். இது கவின் - லாஸ்லியா ஆதரவாளர்களுக்கு சற்று கோபத்தை வர வைத்தது. அதனால் சமூக வலைதளங்களில் சேரனுக்கு எதிரான கருத்துகளை, அவர்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில்,“கவின் லாஸ்லியா ரசிகப்பெருமக்களுக்கு..

உங்களுக்கு பிடித்தவர்களை BB வீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புண்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை.. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன்.. அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் சேரன்.

அதோடு, “நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ”கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை. அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது” என்றும் தெரிவித்துள்ளார்.

சேரனை காயப்படுத்தி கவின் - லாஸ்லியா ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதால் தான், சேரன் இப்படியான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Cheran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment