தமிழ் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக சென்னையில் மரணமடைந்தார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்
54 வயதான கே.வி. ஆனந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
1994-ம் ஆண்டில் மலையாள திரைப்படமான 'தென்மாவின் கோம்பத்' எனும் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முறையாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, செல்லமே உள்ளிட்டத் திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவாளராக இருந்தவர், 2005-ம் ஆண்டு, ஸ்ரீகாந்த், பிரித்விராஜ் மற்றும் கோபிகா இணைந்து நடித்த 'கனா காண்டேன்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன், புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார். தென்னிந்தியா மற்றும் பாலிவுட் உள்ளிட்ட 15 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். இவருடைய திடீர் இறப்பு, ரசிகர்கள் மற்றும் பிற பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil