/indian-express-tamil/media/media_files/ujgbUEnGvsIXdPgPvSZW.jpg)
சாதி, மதம், மொழி, இனத்திற்கு அப்பாற்பட்டது தான் சினிமா என புதுச்சேரியில் திரைப்பட இயக்குனர் ஹரி பேட்டியளித்தார்.
Actor vishal | Puducherry |இயக்குனர் ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக உள்ளது.
அதேபோன்று புதுச்சேரியிலும் ரத்னம் திரைப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் ரத்னம் திரைப்பட வெளியாக உள்ள புதுச்சேரி சண்முகா திரையரங்கிற்கு வந்த இயக்குனர் ஹரி, விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது நடிகர் விஷாலுக்கு மூன்றாவது திரைப்படமாக இந்த படத்தை இயக்கி உள்ளதாகவும் மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் ஏற்படுத்திக் கொடுக்கும்; எனவே அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து தியேட்டரில் குழுமி இருந்த விஷால் ரசிகர்கள் இயக்குனரிடம் செல்பி எடுத்தும் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து இயக்குனர் ஹரி, “நடிகர் விஷாலுக்கு மூன்றாவது திரைப்படமாக ரத்னம் திரைப்படத்தை இயக்குகிறேன். அதாவது சாலையில் செல்லும்போது ஒரு பிரச்சனையை கண்டால் யாரும் உதவ முன்வருவதில்லை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படி உதவும் இளைஞனின் ஒரு கதை தான் இது” என்று குறிப்பிட்டார்.
மேலும், “கில்லி திரைப்படம் மறுபடியும் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே இந்த படம் காட்டுகிறது. எனவே இது போன்ற படங்களை பார்க்கும் பொழுது நாமும் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடிகர்களுக்கு ஒரு தரப்பினர் மட்டுமே ரசிகர்களாக இருப்பார்கள் ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள்.
தலைவர் படம் என்றால் சொல்லத் தேவையில்லை; அவர் படம் எப்போது வந்தாலும் முதல் நாளாக பார்ப்பேன். மேலும் தற்போது வெளியாக உள்ள படத்தை முதல் காட்சியிலே தனது குடும்பத்துடன் பார்க்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, எந்த ஒரு இயக்குனரும் சாதிகளை முன்வைத்து படங்களை இயக்குவதில்லை. நாட்டில் நடக்கும் சாதிய பற்றிய சிந்தனைகள் வைத்து மட்டுமே படங்கள் எடுக்கிறார்கள்.
சினிமா என்பது சாதி மதம் என மொழி இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டது. எனவே சாதிய வைத்து யாரும் இங்கு படம் எடுப்பதில்லை.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி நகரப் பகுதிக்கு வந்த இயக்குனர் ஹரி நேரு வீதி பாரதி வீதி குபேர் அங்காடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த பூ வியாபாரி பழ வியாபாரி காய்கறி வியாபாரி உள்ளிட்ட வியாபாரிகளிடம் 26 ஆம் தேதி வெளியாகியுள்ள விஷால் நடித்த ரத்னம் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். மேலும் அவருக்கு வியாபாரிகளும் வரவேற்பும் அளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.