ஒரே நேரத்தில் படம் பார்த்த ரஜினி - கமல்; த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க ரஜினி மறுத்தது ஏன்? ஜீத்து ஜோசப் சீக்ரெட்!

த்ரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த் நடிக்காததற்கான காரணத்தை, அப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

த்ரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த் நடிக்காததற்கான காரணத்தை, அப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Drishyam Remake

மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம், தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி பாலிவுட் வரை ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக, அனைத்து மொழிகளிலும் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

Advertisment

இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான், தமிழிலும் இயக்குநராக இருந்தார். மலையாளத்தில் மோகன்லால் ஏற்று நடித்த பாத்திரத்தில், தமிழில் கமல்ஹாசன் நடித்தார். ஆனால், இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்ததாக படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் குறிப்பிட்டுள்ளார். சினி உலகம் யூடியூப் சேனலுடனான நேர்காணலின் போது, இந்த சுவாரசிய சம்பவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, "த்ரிஷ்யம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதன் காரணத்தினால் தான் பாபநாசம் திரைப்படம் அமைந்தது. குறிப்பாக, ரஜினிகாந்த மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் த்ரிஷ்யம் திரைப்படத்தை பார்த்தனர்.

படம் பார்த்து முடித்து விட்டு ஏறத்தாழ 30 நிமிடங்களுக்கு ரஜினிகாந்த் அப்படியே அமர்ந்திருந்தார். அதன் பின்னர், எங்களை அழைத்து பாராட்டினார். த்ரிஷ்யம் திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக ரஜினிகாந்த் கூறினார்.

Advertisment
Advertisements

அப்படத்தின் ரீமேக்கில் நடிக்க ரஜினிகாந்த ஆர்வமாக இருந்தார். ஆனால், த்ரிஷயம் திரைப்படத்தில் கதாநாயகனை போலீஸார் அடிக்கும் காட்சியில், தான் நடித்தால் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற தனது தயக்கத்தையும் ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறினார்.

அதே சூழலில் தான் கமல்ஹாசனும் த்ரிஷ்யம் திரைப்படத்தை பார்த்தார். அதன் ரீமேக்கில் நடிக்க கமல்ஹாசன் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டார். அதன் பின்னர், கமல்ஹாசனை கொண்டு அடுத்தகட்ட நகர்வுகளை நாங்கள் தொடங்கினோம்.

எனினும், சில நாட்கள் கழித்து ரஜினிகாந்திடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அப்போது, த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்தார். ஆனால், கமல்ஹாசனுடன் இணைந்து படத்திற்கான பணிகளை நாங்கள் தொடங்கியதாக அவரிடம் கூறினோம்.

இதைக் கேட்ட ரஜினிகாந்த எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால் தான், ரஜினிகாந்த் உடன் இணைந்து த்ரிஷ்யம் ரீமேக்கை எங்களால் செய்ய முடியவில்லை" என்று ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: