/indian-express-tamil/media/media_files/2025/09/06/screenshot-2025-09-06-161519-2025-09-06-16-15-40.jpg)
ரஜினிகாந்த், பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ. முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்தார். பிறகு வருஷம் 16 படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ஹிட்டானது. அதனையடுத்து குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல் என 80களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.
மும்பையை பூர்வீகமாகக் கொண்டாலும் குஷ்பூ தமிழில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழை முறையாக கற்றுகொண்டவர். தனது சொந்த குரலில் வெகு விரைவிலேயே டப்பிங்கும் பேச ஆரம்பித்துவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ரவுண்டு கட்டி வலம் வந்தவர் குஷ்பூ.
குஷ்பூ முன்னணி கதாநாயகியாக இருந்தபோது தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர். கமலுடன் இணைந்து மைக்கேல் மதன காமராஜன், வெற்றிவிழா, சிங்காரவேலன் என மெகா ஹிட்டுகளையும், ரஜினியுடன் இணைந்து அண்ணாமலை, மன்னன், பாண்டியன் என ப்ளாக்பஸ்டர்களையும் கொடுத்திருக்கிறார்.
90களில் குஷ்பூ மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டு மட்டும் அவர், "மன்னன், ரிக்ஷா மாமா, பாண்டித்துரை, சிங்காரவேலன், சேவகன், இது நம்ம பூமி, அண்ணாமலை, அம்மா வந்தாச்சு, நாளைய செய்தி, பாண்டியன் என மொத்தம் 10 தமிழ் படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.
அதேபோல் குஷ்பூவுக்கு பலர் தீவிர ரசிகர்களாக இருந்தனர். அவர்கள் குஷ்பூவுக்காக கோயில் கட்டிய நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாட்டில் அரங்கேறின. கோயில் மட்டுமின்றி குஷ்பூ இட்லி என்ற பெயரிலும் உணவு ஒன்று உருவானது. தமிழ் சினிமா வரலாற்றில் நடிகை ஒருவருக்கு கோயில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்பூவுக்குத்தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை பற்றி இயக்குனர் கஸ்துரி ராஜா ஒரு பேட்டியில் பேசியபோது கூறுகையில், "குஷ்பூவிற்கு வயது ஆகிவிட்டது என்று சொன்னவுடன் எனக்கு தான் மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என் கூட மட்டுமே 9 படங்கள் நடித்துவிட்டார். அப்படி ஒரு நாள் ஷூட்டிங்கில் காடு போன்ற ஒரு இடத்தில அடுத்த ஷாட்டிற்கு துணி மாற்றி விட்டு வர வேண்டும் அனால் அந்த இடத்தில ஒரு மரம் கூட இல்லை. ஆனாலும் அவர் உதவியாட்களை வைத்து ஒரு புடவையை விரித்து பிடிக்க சொல்லி மாற்றி விட்டு வந்து அந்த ஷாட்டையும் முடித்து படத்தையும் முடித்து கொடுத்தார். இப்போது யாரவது அப்படி செய்வார்களா?" என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.