மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க தற்போது பலரும் போட்டிப்போட்டு வருகின்றனர். இதில் இயக்குநர் லிங்குசாமி இணைந்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை லிங்குசாமி இயக்க உள்ளார். அந்த படத்தை சசிகலாவின் உறவினர் ஜெயனானந்த் தயாரிக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப் போவதாக பாரதிராஜா, ப்ரியதர்ஷினி, ஏ.எல். விஜய் ஆகியோர் அறிவித்துள்ளனர். ப்ரியதர்ஷினியின் படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை நான்காவது ஆளாக லிங்குசாமி இயக்க உள்ளார். இந்த படத்தை சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தயாரிக்க உள்ளார். நான்கு பேர் போட்டி போட்டு படம் எடுக்கும் நிலையில் அத்தையை பற்றி யாரும் படம் எடுக்கக் கூடாது என்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்.
அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குநர் எனது நண்பர் திரு.லிங்குசாமி அவர்களால் படமாக்கப்படும். இதில் நடராஜன் மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குநர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும் என்று ஜெயானந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை சார்ந்து இருந்தாலும், படத்தில் முக்கியத்துவம் சசிகலாவுக்கே என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கத்துக்குட்ட மொத்தைய வித்தையும் இதில் இறக்குவாரா லிங்குசாமி?