எஸ். சுபகீர்த்தனா
Director Lokesh Kanagaraj: பிகிலுடன் இணைந்து வெளியான கைதி திரைப்படம் ரூ .100 கோடியைத் தொட்டுள்ளது. கார்த்தி நடித்த அந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அவருடனான சந்திப்பு பின்வருமாறு.
லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கி, ஏற்கனவே சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்று விட்டார். இப்போது ‘தளபதி 64’ ஐ இயக்கிக் கொண்டிருக்கிறார். "நான் பணிபுரியும் விஜய் படம் தவிர, எதைப்பற்றி வேணுமானாலும் பேசலாம், அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றவாறு புன்னகைத்தார்.
லோகேஷ் தான் இயக்க விரும்பும் திரைப்படங்களைப் பற்றி மிக தெளிவான உணர்வைக் கொண்டுள்ளார். "நான் மிகவும் சுயவிமர்சனம் உள்ளவன், அதனால் தான் நான் மாநகரத்திற்கு பிறகு அடுத்தப்படத்திற்கு அவசரப்படவில்லை. அடுத்தடுத்து படங்களில் கையெழுத்திடுவதற்கு பதிலாக, பொறுமையாக காத்திருந்து இரண்டு ஸ்கிரிப்ட்களை எழுதி முடித்தேன்" என்றார்.
கைதி திரைப்படத்தை இயக்கியதில் மகிழ்ச்சி அடைந்த இயக்குனர், கார்த்தி நடித்ததை லிட்மஸ் சோதனை என்று குறிப்பிட்டார். "படம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்தது, எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நாள், என் அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். செய்தித்தாளில் வந்த ஒரு அசத்தலான சம்பவம் என் கவனத்தை ஈர்த்தது. நான் அதை படமாக உருவாக்கினேன். மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் கைதி எழுதினேன். ஆனால் கார்த்தி படத்தில் இணைந்ததும் பட்ஜெட்டின் அடிப்படையில் படம் பெரிதாக வளர்ந்தது. நான் நினைத்ததை விட இது மிகவும் சுவாரஸ்யமானது” என்று கைதியின் தொடக்கநிலையை நினைவுக்கூர்ந்தார்.
"ஹாலிவுட் படங்களைப் போலவே, கைதியின் கதையையும் ட்ரெய்லரில் எந்தவித அச்சமும் இல்லாமல் சொல்லியிருந்தோம். அதனால் பார்வையாளர்கள் முன்கூட்டியே தயாரானார்கள். கூடவே என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.
"திரைத்துறையில் காலடி வைப்பது சவாலானது" என்பதை ஒப்புக் கொண்ட லோகேஷ், "பார்வையாளர்கள் மாநகரத்தை விரும்பியபோது, ஏன் அவர்களுக்கு பிடித்தது என பகுப்பாய்வு செய்துக் கொண்டே, கைதியை உருவாக்கினேன். குறிப்பிட்ட வகையான திரைப்படங்களை மட்டுமே இயக்கும் இயக்குநர் என நான் அடையாளம் காணப்பட்டால், பரவாயில்லை. எனது பலம் மற்றும் பலவீனங்களை நான் அறிவேன்" என்றார்.
கைதி 46 நாட்களில் நிறைவடைந்தது. இது சாதாரண சாதனை அல்ல என்று லோகேஷ் கருதுகிறார். "உங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களை நீங்கள் எவ்வளவு அதிகமாக புரிந்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு சிறந்தது. தொழில்நுட்ப வல்லுநர்களாக சிறந்த நண்பர்களைக் கொண்டிருப்பது கூடுதல் நன்மையாகும். நாம் எழுதிய எந்த வகையான அகதைகளையும் அவர்களால் திரையில் மொழிபெயர்க்க முடியும்" என்பதில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருக்கிறார் லோகேஷ். தன்னுடன் குறும்படங்களில் வேலை செய்த நண்பர்களையே, கைதியிலும் பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறார். "நான் ஏன் இந்த விஷயத்தை செய்கிறேன் என்பதை நான் அவர்களுக்கு விளக்க வேண்டியதில்லை. எனது குழுவினருக்கு அதற்கான விடை தெரியும். இதுபோன்ற எண்ணம் கொண்டவர்களுடன் பணியாற்றுவது அவசியம்" என்று கூறினார்.
கைதி வெளியானதிலிருந்து தனது தொலைபேசி ஒலிப்பதை இன்னும் நிறுத்தவில்லை என்று லோகேஷ் கூறுகிறார். "வாட்ஸ் அப்பில் எனக்கு 1000-க்கும் மேற்பட்ட வாழ்த்துச் செய்திகள் குவிந்தன. அது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. காரணம் அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. வெற்றியைக் கையாள நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்," என்று சிரிக்கிறார் லோகேஷ்.
கைதி படத்தின் தொடர்ச்சி எப்படி? "நிச்சயமாக, திட்டங்கள் செயல்முறையில் இருக்கின்றன. ஆனால் நான் உடனடியாக கைதி 2 ஐ இயக்க விரும்பவில்லை. இன்னும் ஒரு மூன்று ஆண்டுகளில் கைதியின் அடுத்த பாகத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்" என்று புன்னகைக்கிறார்.
சமூக ஊடகங்களில் நீங்கள் ஆக்டிவாக இல்லையே? "இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது" என்று கூறும் லோகேஷ், அனைவரும் கேட்டுக் கொண்டதற்காக ட்விட்டரில் அக்கவுண்ட் ஓபன் செய்தாராம். "நீங்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாக இல்லாதவரை, அது நல்லது. ஆனால் அது கவர்ச்சியூட்டும்போதைக்குரியது" என்கிறார்.
"ஒரு திரைப்பட இயக்குநராக நான் அதிக பொறுப்பை உணர்கிறேன். நான் எனது கனவுகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். அதன் ஒவ்வொரு பிட்டையும் ரசிக்கிறேன்" என்று புன்னகைக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.