Advertisment

பிரபு, விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர்... தெருவோரம் இறந்து கிடந்த சோகம்!

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எம்.தியாகராஜன் ஏ.வி.எம் ஸ்டுடியோ எதிரில் தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Director M Thiyagarajan passed away, Director M Thiyagarajan died at street, Director M Thiyagarajan dies at street in opposite to AVM studio, Vetri mel vetri, maanagara kaaval, vijayakanth movie director m thiyagarjan, பிரபு விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எம் தியாகராஜன் மரணம், தெருவோரம் இறந்து கிடந்த இயக்குனர் எம் தியாகராஜன், தமிழ் சினிமா, மாநகர காவல், வெற்றி மேல் வெற்றி, Director M Thiyagarajan, tamil cinema

நடிகர் பிரபு, விஜயகாந்த்தை வைத்து சினிமா இயக்கிய இயக்குனர் எம்.தியாகராஜன் புதன்கிழமை அதிகாலைஏ.வி.எம் ஸ்டுடியோ எதிரிலேயே தெருவோரமாக அனாதைப் பிணமாக இறந்து கிடந்த சம்பவம் தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயகியவர் இயக்குனர் எம்.தியாகராஜன். இவர் நடிகர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம். தயாரிப்பு நிறுவனத்தின் 150வது படமான நடிகர் விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மாநகர காவல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த இயக்குனர் எம். தியாகராஜன், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். சினிமா இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் டி.எஃப்.டி படித்து சினிமா இயக்குனரானார். வெற்றி மேல் வெற்றி, மாநகரக் காவல் ஆகிய வெற்றிப் படங்களையும் இயக்கினார்.

publive-image

பின்னர், அவருக்கு அவரது சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். கோமாவிலிருந்து பிழைத்து மீண்டும் கோடம்பாக்கத்திற்கு சினிமாவை நோக்கி வந்தார். வடபழனியில் அழுக்கான உடையோடு கையில் செய்தித்தாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார்.

publive-image

இந்த நிலையில், இயகுனர் எம். தியாகராஜன் ஏவிஎம் ஸ்டுடியோ எதிரிலேயே இன்று (டிசம்பர் 8) அதிகாலை தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ளார். யாரோ இறந்து கிடக்கிறார் என்ற தகவல் அறிந்து வந்த போலீசார் வந்து ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு அவரது உடலை எடுத்துச் சென்றனர். பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எம்.தியாகராஜன் ஏ.வி.எம் ஸ்டுடியோ எதிரில் தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Tamil Cinema Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment