தொழில்துறைகளில் பாலிவுட் அல்லது கோலிவுட் என்று முத்திரை குத்தப்படுவது நிறுத்த வேண்டும் என்று முன்னணி இயக்குனராக மணிரத்னம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வரும் ஏப்ரல் 28-ந் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பொன்னியின் செல்வன் 2 வெளியீட்டை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இயக்குனர் மணிரத்னம், சமீபத்தில் சென்னையில் நடந்த CII தக்ஷின் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் உச்சிமாநாட்டின் இரண்டாவது பதிப்பில் கலந்து கொண்டார்.
இதில் தென்னிந்திய திரைப்படங்களின் தாக்கம் குறித்து பேசிய ஒரு குழுவில் பேசிய மணிரத்னம், ஒரு கட்டத்தில் தொழில்துறைகளை பாலிவுட் அல்லது கோலிவுட் என்று முத்திரை குத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். மேலும் “இந்தி சினிமா தங்களை பாலிவுட் என்று அழைப்பதை நிறுத்தினால், மக்கள் இந்திய சினிமாவை பாலிவுட் என்று அடையாளம் காண்பதை நிறுத்திவிடுவார்கள்” என்று இயக்குனர் கூறினார்.
அனுராக் காஷ்யப்பின் நெருங்கிய நண்பராகக் கூறப்படும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன், இந்த வார்த்தையைப் பற்றி இதேபோன்ற உணர்வுகளைக் கொண்டிருந்தார். “நான் ‘வூட்ஸ்’ ரசிகன் அல்ல. பாலிவுட், கோலிவுட் அனைத்துமே மொத்தத்தில் இந்திய சினிமாவாகவே பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த குழுவில் நடிகரும் திரைப்பட இயக்குனருமான ரிஷாப் ஷெட்டியும் கலந்து கொண்டார், இவர் கடந்த ஆண்டு வெளியான கன்னட ஹிட் காந்தாராவுக்குப் பின் கவனிக்கப்படும் இயக்குனராக உள்ளார். உலகளவில் உள்ளூர் ப்ரமோஷனின் முக்கியத்துவத்தைப் பேசிய ரிஷப் ஷெட்டி, இந்தியாவில் ஒரு பெரிய மக்கள்தொகை உள்ளது. இந்த மக்களின் தினசரி வாழ்வியில் அடிப்படையில் கதைகள் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil