Advertisment

இயக்குநர் மணிரத்னத்துக்கு பெருமைக்குரிய விருது, பிரபல பாலிவுட் நடிகருக்கு திருமணம்… விரிவான செய்திகள் உள்ளே…

இந்தப் படத்தின் டிரைலர் யூ-டியூப் தளத்தில் வெளியாகிய ஒரு மணி நேரத்துக்குள் 4 லட்சம் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
Feb 04, 2022 13:24 IST
New Update
இயக்குநர் மணிரத்னத்துக்கு பெருமைக்குரிய விருது, பிரபல பாலிவுட் நடிகருக்கு திருமணம்… விரிவான செய்திகள் உள்ளே…

அரசுக்கு 13 சென்ட் நிலத்தை நன்கொடை

Advertisment

அளிக்க முன்வந்த பிரபல இயக்குநர்

மலையாள திரைப்பட உலகில் பழம்பெறும் இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன் (80) அரசின் நலத் திட்டத்திற்காக தனக்குச் சொந்தமான 13 சென்ட் நிலத்தை நன்கொடையாக அளிக்க உள்ளதாக அறிவிந்துள்ளார்.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்.

அந்தத் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு 13 சென்ட் நிலத்தை அளிக்க முன்வந்துள்ளார்.

அந்த மாநில அமைசசர் கோவிந்தன் அடூர் கோபாலகிருஷ்ணன் இல்லத்துக்குச் சென்று அவரது நன்கொடையை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

மற்றவர்களையும் இதுபோன்று செய்யத் தூண்டும் இவரது அறிவிப்பு பாராட்டுக்குரியது என்றார் அமைச்சர் கோவிந்தன்.

பத்தாண்டுகள் திரைப்பயணத்தை

நிறைவு செய்த பிரபல நடிகர்

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த இளைஞர் சிவகார்த்திகேயன் இன்று திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இயக்குநர் பாண்டிராஜின் மெரினா படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

2012ம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியானது.

அவ்வகையில் இவர் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதையொட்டி அவரது ரசிகர்களும், திரையுலக பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்துக் கூட பார்த்திராத நிஜம்.

இத்தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும், உடன் நின்று பயணித்த இயக்குநர்களுக்கும், தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றி அத்தனை தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகருக்கு இரண்டாவது திருமணம்

டூஃபான், பாக் மில்கா பாக், ஜிந்தகி நா மிலேகி தோபரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஃபர்கான் அக்தர், பாடகி ஷிபானி தந்தேகரை இம்மாதம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று ஃபர்கானின் தந்தை ஜாவேத் அக்தர் தெரிவித்தார்.

திருமணம் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் ஆடம்பரமாக இருக்காது என்று ஜாவேத் தெரிவித்தார்.

ஃபர்கான் அக்தர் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தானவர். இவரது முதல் மனைவி அதுனா பபானி அக்தர் இங்கிலாந்தைச் சேர்ந்த சிகைக் கலைஞராவார்.

2018-ஆம் ஆண்டு முதல் ஷிபானி தந்தேகரும், ஃபர்கானும் காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியான

1 மணி நேரத்தில் 4 லட்சம் பார்வையாளர்கள்

சர்ச்சைக்குரிய இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள படம் கங்குபாய் கதியாவாடி. இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் முன்னணி பாலிவுட் நடிகையான அலியா பட்.

படத்தின் டிரைலர் யூ-டியூப் தளத்தில் இன்று வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்துக்குள் 4 லட்சம் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வருகிறது.

பீரியட் படமாகி உருவாக்கப்பட்டுள்ள கங்குபாய் கதியாவாடில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அலியா பட்.

முக்கிய வேடத்தில் முன்னணி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.

பத்மாவத் படத்தை எடுத்து பெரும் சர்ச்சைக்குள் சிக்கியவர் தான் இந்தப் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

இவர், பாஜிராவ் மஸ்தானி, ராம் லீலா, பிளாக், குஸாரிஷ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்துக்கு பெருமைக்குரிய விருது

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள எம்ஐடி உலக அமைதி பல்கலைக்கழகம் பாரத் அஸ்மிதா என்ற விருதுக்கு தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னத்தை தேர்வு செய்துள்ளது.

திரைத்துறைக்கு அதிக பங்களிப்பு செய்ததற்காக இந்த விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நினைவுப் பரிசும், ரூ.1.25 லட்சம் வெகுமதியும் இந்த பெருமைக்குரிய விருதில் அடங்கும்.

இயக்குநர் மணி ரத்னம் இதுவரை 6 முறை தேசிய திரைப்பட விருதையும், 4 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், ஆறு முறை சவுத் ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். திரைப்படத் துறைக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியன் செல்வன் காவியத்தை இயக்குநர் மணி ரத்னம் தற்போது படமாக எடுத்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

#Tamil Cinema #Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment