தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் மணி ரத்னம், செவ்வாய்க்கிழமை தனது ரசிகர்களுடன் சமூக ஊடகங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடினார். ஒரு திரைப்படத்தை இயக்குவது குறித்து பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இந்தியாவில் முன்னதாக 21 நாட்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது நடிகை – திரைப்பட இயக்குநர் சுஹாசினி தனது சமூக ஊடகங்களின் மூலம் பிரபலங்களுடன் உரையாடலை தொடங்கினார். 21-வது நாளின் கடைசி நாளில், அவர் தனது கணவர் மணிரத்னத்திடம் உரையாடலை மேற்கொண்டார்.
Coronavirus Live Updates: இந்தியாவில் 12,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்த உரையாடல், மணிரத்னத்துக்கு மில்லினியல்களில் எவ்வாறு செல்வாக்கு அதிகரித்தது என்பதைக் கண்டறிய உதவி புரிந்தது. 1980-களின் முற்பகுதியில் ’பல்லவி அனு பல்லவி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதலில் கமல்ஹாசனை அணுகினாலும், பின்னர் அனில் கபூரை வைத்து, கன்னடத்தில் அப்படத்தை இயக்கினார். 20-ஆம் நூற்றாண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக மாறிய மணிரத்னம், இன்றுவரை இளம் திரைப்பட இயக்குநர்கள் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார்.
தங்கள் கேள்விகளை வீடியோ பதிவு செய்த பல இளம் ரசிகர்கள், அவரது திரைப்படங்களைப் பார்த்தபின் திரைப்படம் இயக்க ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டனர். “நீங்கள் என்னை காரணமாக வைத்து திரைப்பட இயக்கத்தை மேற்கொண்டிருந்தால், நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எதை உருவாக்குகிறீர்கள், எப்படி உருவாக்குகிறீர்கள் என்பது உங்கள் பிரச்சினை. இறுதியாக வெளிவரப் போகும் ஃபைனல் அவுட்புட்டிற்கு என்னைக் குறை கூற வேண்டாம்” என்று பதிலளித்தார் மணிரத்னம்.
மேலும், செவ்வாயன்று ம்ணிரத்னத்தின் பிளாக்பஸ்டர் காதல் படமான அலைபாயுதே படம் 20-ம் ஆண்டை நிறைவு செய்தது. ஏப்ரல் 14, 2000 அன்று வெளியான இந்த திரைப்படம் மாதவனை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியது.
மாதவன் தனது சில கேள்விகளுடன் நேரடி விவாதத்தில் சேர்ந்தார். அலைபாயுதே செட்டில் நான் நடிகர் மட்டுமல்ல, உதவி இயக்குனராகவும், அதே நேரத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேலையிலும் தான் இருந்ததை நினைவு கூர்ந்தார்.
“நீங்கள் அறிமுகப்படுத்தும் அனைத்து நடிகர்களும் இதைச் செய்ய அனுமதிக்கிறீர்களா?” என்று கேட்டார் மாதவன்.
“மேடி அது உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல்” என மணி ரத்னம் பதிலளித்தார்.
நடிகை குஷ்பூ மற்றும் அவரது மகள் ஆனந்திதாவும் லைவில், ஒரு குறுகிய தோற்றத்தை வெளிப்படுத்தினர். அதிதி ராவ் ஹைதாரியும் சில கேள்விகளுடன் லைவ் சாட்டில் சேர்ந்தார். காற்று வெளியிடை (2017) திரைப்படத்தில் நடிப்பதற்காக, மணிரத்னத்தின், அலுவலகத்திற்கு ஆடிஷன் சென்ற அனுபவத்தை அதிதி நினைவு கூர்ந்தார்.
உங்கள் படத்திற்கு நடிகர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்? என அதிதி கேட்டதற்கு, “எனக்கு மிகக் குறைவான பிரச்சனையைத் தரும் ஒருவரை தான் நான் தேடுகிறேன்” என்று மணிரத்னம் கூறினார்.
“நடிகர்கள் தேர்வு வேலையின் 50 சதவீதத்தை பூர்த்தி செய்து விடும். நீங்கள் நன்றாக நடிகர்களை தேர்வு செய்து, அவர்களுடன் சரியான ஒத்திசைவை வைத்திருந்தால், அந்த தொகுப்பில் உங்கள் வேலை மிகவும் எளிதானது” என்று ரத்னம் கூறினார். மேலும் அவர் எப்போதும், தனது கதாபாத்திரங்களின் வித்தியாசமான விளக்கத்தைக் காண உதவும் நடிகர்களைத் தேடுவதாகக் குறிப்பிட்டார்.
“நான் சொல்வதைச் சரியாகச் செய்யும் ஒருவரை நான் தேடவில்லை. தன்னை அந்த பாத்திரத்தில் சேர்க்கக்கூடிய ஒரு நடிகரை நான் தேடுகிறேன். எனவே காகிதத்தில் இருப்பதை விட அதிகமானவற்றைப் பெற முடியும். அந்த கூடுதல் விஷயத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றார் மணி ரத்னம்.
ரசிகர் ஒருவர், ”ஏன் நீங்கள் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை, யாரேனும் உங்களை நடிக்க அணுகினார்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மணிரத்னம், “ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடிக்க அழைத்தார். நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஏனென்றால், நான் நடித்திருந்தால், அதன் பிறகு மீண்டும் படம் இயக்கும்போது மற்ற நடிகர்கள் ‘நான் பார்த்தேனே நீங்க நடிச்ச அழக’ என சொல்லிவிடுவார்கள். எதுக்கு வம்புனு நான் நடிக்கல” என்றார் மணிரத்னம்.
டெல்லி மாநாட்டில் கலந்துக் கொள்ளவில்லை: ஆனாலும் கொரோனா தொற்றால் உ.பி-யில் தமிழர் மரணம்
மணி ரத்னத்தின் அடுத்த படம் ”பொன்னியின் செல்வன்”. லாக் டவுனால் படத்தின் தயாரிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. “பொன்னியின் செல்வன் இரண்டு பகுதி படம்” என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்திருந்தார். மேலும் தான் ஒரு ஸ்கிரிப்ட்டில் பணிபுரிவதாகவும், எல்லாமும் சரியாகச் சென்றால், பொன்னியின் செல்வனுக்குப் பிறகு, அதை இந்தியில் படமாக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.