'செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் ’பொன்னியின் செல்வன்’ கதையை படமாக இயக்குகிறார்.
இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராஜ், கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தனது அடுத்தப் படத்துக்கு தயாராகிவிட்டார் மணி. இயக்குவதில் அல்ல தயாரிப்பதில். ஆம்! மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் அடுத்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இதனை ‘படைவீரன்’ பட இயக்குநர் தனா இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபுவும், அவருக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷும், ஜோடியாக மடோனா செபாஸ்டியனும் நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ், ராதிகா மற்றும் சரத்குமார் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
அதோடு இந்தப் படத்தின் படபிடிப்பு ஜூலை மாத மத்தியில் தொடங்க திட்டமிட்டிருக்கிறார்களாம் படக்குழுவினர்.