New Update
/indian-express-tamil/media/media_files/ja83oTGDra5v5g88zEnn.jpg)
மீண்டும் தனுஷ் நடிப்பில் இயக்க உள்ள படம் சரித்திர பின்னணி கொண்ட வரலாற்று திரைப்படமாக இருக்கும் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
வாழை பாடத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில், பைசன் என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்து தனுஷ் நடிப்பில் இயக்க உள்ள படம் குறித்து பேசியுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தின மூலம் கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ், தனது 2-வது படமாக தனுஷ் நடிப்பி்ல் கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து உதயநிதி – பகத் பாசில் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கினார். வடிவேலு டைட்டில் கேரக்டரில் நடித்திருந்த மாமன்னன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து தன் வாழ்வில் சந்தித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கினார். சிறிய பட்ஜெட்டில் தயாரான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், திரையுலகில் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படத்தின் திரைபக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பைசன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்து, மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ், இது எனது கனவுப்படம். சரித்திர வரலாற்று பின்னணி கொண்ட படம். பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தை எடுத்து வெளியிட சுமார் ஒன்றரை வருடம் ஆகும் என்று கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான ராயன் படம் தனுஷின் 50-வது படம் என்ற அடையாளத்துடன் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்கி நடித்திருந்த தனுஷ் தற்போது மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வரும் தனுஷ் தெலுங்கில் குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் தனுஷ் அதன்பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் இதுவரை நடித்திராத வரலாற்று மற்றும் சரித்திர பின்னணி கொண்ட கதையம்சம் உள்ள இந்த படம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.