ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்காக படம் எடுக்கவில்லை, அதே சமயத்தில் தான் சார்ந்துள்ள சமுதாயத்தை பின்னணியாக வைத்து படம் எடுக்கிறேன் என்று பகாசூரன் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்
ருத்ர தாண்டவம், திரௌபதி, படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி-யின் 3-வது படமான பிரசன்ட்ஸ் வழங்கும் செல்வராகவன் நடித்த பகாசூரன் திரைப்படம் நேற்று நாடு முழுவதும் வெளியானது.
புதுச்சேரி அட்லாப்ஸ் தியேட்டரில் வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குனரான மோகன் ஜி இன்று திரையரங்கத்திற்கு நேரடியாக வந்து படம் பார்த்து வெளியே வந்தவர்களிடம் படத்தைப் பற்றி கருத்து கேட்டு தெரிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர்,
பெண்களின் விழிப்புணர்வுக்காகவே படம் எடுப்பதாக குறிப்பிட்ட அவர் எந்த சமுதாயத்திற்காகவும் படம் எடுக்கவில்லை என்றும், அதே சமயத்தில் தான் சார்ந்துள்ள சமுதாயத்தை பின்னணியாக வைத்து படம் எடுப்பதாக மோகன் ஜி கூறினார்.
தான் படம் எடுத்தால் தன்னை தனியாக அடையாளம் காட்டி ஒரு பிம்பம் உருவாக்கப்படுவதாக குறிப்பிட்ட இயக்குனர் மோகன் ஜி இதை எல்லாம் கலைத்தெறிந்து பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"