போன வருஷம் சொன்னதை இந்த வருஷம் செய்ய போகிறார் மோகன் ராஜா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Director Mohan Raja to direct Actor Vijay, இயக்குநர் மோகன் ராஜா

Director Mohan Raja to direct Actor Vijay

2011ம் ஆண்டில் விஜய்யை வைத்து இயக்கிய இயக்குநர் மோகன் ராஜா மீண்டும் விஜய் வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

Advertisment

வேலாயுதம் என்ற படத்தை விஜய்யை வைத்து எடுத்தவர் மோகன் ராஜா. 2011ம் ஆண்டு அந்த படம் வெளியானது. சுமார் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் என்ற சூப்பர் தகவல் கிடைத்துள்ளது.

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தளபதி விஜய்

வேலைக்காரன் படத்தை இயக்கிய மோகன் ராஜா, கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி ஒரு புகைப்படத்துடன் டுவீட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் “நீண்ட நாட்களுக்கு பின்னர் எனது நெருங்கிய நண்பரை சந்தித்தேன். என்ன மனிதர் இவர்! இத்தனை நாட்கள் பேசத் தவறிய பல விஷயங்கள் பற்றி பேசினோம். வேலைக்காரன் பற்றி அவர் பெருமைக் கொண்ட தருணம் என் வாழ்வில் ஒரு சிறந்த தருணம்” என்று பதிவிட்டிருந்தார்.

Advertisment
Advertisements
January 2018

அதன் பிறகும் பல பேட்டிகளில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மோகன் ராஜா தெரிவித்திருந்தார். தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு விளையாட்டு வீரராக நடித்து வருகிறார் விஜய். எனவே மோகன் - விஜய் கூட்டணியில் எப்போது புதிய படம் துவங்கும் என்ற உறுதி தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் விரைவில் மோகன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Cinema Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: