திரௌபதி, பாசூரன் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் மோகன் ஜி, வலையொளிக்கு ஒன்று அளித்த பேட்டியில் தம் மீதான சாதி விமர்சனங்களுக்கு பதில் கொடுத்தார்.
அப்போது தாம் திட்டமிட்டு கதாபாத்திரங்களை உருவாக்குவதில்லை. ஆனால் சாதி, மதத்துக்கு பின்னால் ஒளிந்து கொள்பவர்களை வெளிக்கொண்டு வருகிறேன்” என்றார்.
தொடர்ந்து தாம் தனது படத்தில் நடிக்கும் எந்த நடிகையிடமோ, நடிகரிடமோ சாதி குறித்து கேட்பதில்லை எனவும் ஒரு நடிகையின் சாதி, நடிகரின் சாதி குறித்து தெரிந்துகொண்டு படம் எடுக்கும் இயக்குனர்களையும் தமக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து குறிப்பிடுகையில், “கௌதம் வாசுதேவ் மேனனை சின்ன சிம்பு என திரையுலகினர் கூறுகின்றனர் என்றார்.
மேலும், திரௌபதி படத்தை ரூ.46 லட்சம் செலவில் எடுத்ததாகவும், தற்போது அவ்வளவு பணத்தை கொடுத்து அந்தப் படத்தை எடுக்க கூறினால் தம்மால் எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“