பா.ரஞ்சித் தயாரிப்பில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு டிரெய்லர் டிரெண்டிங்

Irandam Ulagaporin Kadaisi Gundu Official Trailer: அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

By: August 29, 2019, 3:01:12 PM

Irandam Ulagaporin Kadaisi Gundu Official Trailer: அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் அவருடைய திரைப்படங்கள் பேசும் அரசியலுக்காகவும் அவ்வப்போது தெரிவிக்கும் அரசியல் கருத்துகளுக்காகவும் கவனம் பெற்று வருகிறார். இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் சென்னை நகர மக்களின் இசை வடிவமான கானா பாடல், பாடும் கலைஞர்களுக்கு மேடையை தயார் செய்வது உள்ளிட்ட பணிகளையும் செய்துவருகிறார். அது மட்டுமில்லாமல், பா.ரஞ்சித் தனது நீலம் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

பா.ரஞ்சித் இதற்கு முன்பு, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தயாரித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, பா.ரஞ்சித் தனது படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அதியன் ஆதிரை இயக்கத்தில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் யூ டியூப் டிரெண்டிங்கில் 3வது இடத்தில் உள்ளது.

படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை ஒரு கவிஞர் ஒரு கவிதை தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். மெட்ராஸ் படத்தில் ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்.

இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். டென்மா என்பவர் இசையமைத்துள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரெய்லர் கதையை தெருக்கூத்து மொழியில் விவரித்திருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும், டிரெய்லரில் கூலி உயர்வு, கம்யூனிஸ்ட் போராட்டம், மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Director p ranjiths neelam productions presents irandam ulagaporin kadaisi gundu trailer trending

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X