என் சம்பாத்தியம் அத்தனையும் சாப்பிட்ட அந்த திருட்டு... ரியல் லைஃப் சம்பவம் பற்றி நிகழ்ச்சியில் கோவப்பட்ட பாண்டிராஜ்

தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தன்னை எந்த அளவிற்கு பாதித்தது என்று இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். இதனால், தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தன்னை எந்த அளவிற்கு பாதித்தது என்று இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். இதனால், தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Director Pandiraj

இயக்குநர் பாண்டிராஜ், தன்னை ஏமாற்றிய ஒரு நபர் குறித்து எஸ்.எஸ். மியூஸிக் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதனால், தனது வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில், ஃபேமிலி டிராமா வகையான திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர்கள் எண்ணிக்கை தற்போது குறைவாக இருக்கிறது. எனினும், இவர்களில் இயக்குநர் பாண்டிராஜுக்கு முதன்மையான இடம் இருக்கிறது. பசங்க திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் கால் பதித்த இயக்குநர் பாண்டிராஜ், வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் என பல படங்களை இயக்கியுள்ளார். 

சமீபத்தில் இவர் இயக்கிய தலைவன் தலைவி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். இப்படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக பல நேர்காணல்களில் பாண்டிராஜ் கலந்து கொண்டார். அப்போது, தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம், தன்னை எந்த அளவிற்கு பாதித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, "என்னை ஏமாற்றி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக பூங்கா நகர் குமார் என்பவரை கைது செய்தனர். என் சம்பாத்தியம் முழுவதையும் அந்நபர் ஏமாற்றி விட்டார். அந்நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விடலாம் என்ற அளவிற்கு எனக்குள் ஆத்திரம் இருந்தது.

Advertisment
Advertisements

அந்த அளவிற்கு எனக்கு கோபத்தை ஏற்படுத்திய நபர் அவர் தான். அவருடைய மொத்த குடும்பத்தினரும் தவறான ஆட்களாக இருந்தனர். ஒரு படைப்பாளியால் எல்லா நேரத்தில் கதையை யோசித்துக் கொண்டு இருக்க முடியாது. அதற்காக நிறைய படிக்க வேண்டும். ஆனால், இது போன்ற விஷயங்கள் என்னை பெரிதும் பாதித்தன. இதன் காரணமாக படங்கள் இயக்குவதில் சற்று இடைவெளி எடுத்துக் கொண்டேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போன்ற நபர்களை சந்தித்தேன். குறிப்பாக, நிறைய மோசமான நபர்களை காண நேர்ந்தது. பணத்திற்காக இவ்வளவு அயோக்கியத்தனமாக செயல்பட முடியுமா என்று என்னை சிந்திக்க வைத்தது" என இயக்குநர் பாண்டிராஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

Pandiraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: