இயக்குனர் பார்த்திபன் தமிழில் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் பாலிவுட்டில் ரீ மேக் மேக் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தில் இந்தியில் உலக நாயகன் கமல்ஹாசனே வியந்த பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கடந்த ஆண்டு தமிழில் அவரே இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு. இந்தப் படம் முழுவதும் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். அவர் ஒத்த செருப்பு படத்தை பரிசோதனை முயற்சியாக மோனோ ஆக்டிங் வகையில் அமைத்து இயக்கியிருந்தார். படம் முழுவதும் ஒரே ஆளாக நடித்திருந்தாலும் பார்வையாளர்களை தனது நடிப்பு மற்றும் திரைக்கதையால் இருக்கையில் கட்டிவைத்திருந்தார் என்றே சொல்லலாம்.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரிய வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல், உலக திரைப்பட விழாக்களில் தேர்வாகி திரையிடப்பட்டு உலக அளவில் கவனம் பெற்றது.பார்த்திபனின் இந்த முயற்சி திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஒத்த செருப்பு படம் பாலிவுட்டில் இந்தியில் ரீ மேக் செய்யப்பட உள்ளதாக இயக்குனர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது…. pic.twitter.com/eK4KVaKJcZ
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 5, 2020
இது குறித்து பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில், “Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை ‘வச்சி செய்ய’ இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது….” என்று நவாசுதீன் சித்திக் உடனான புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
நவாசுதீன் சித்திக் உலக நாயகன் கமல்ஹாசனே வியந்த பிரபல பாலிவுட் நடிகர். இவர் கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் போன்ற படங்களில் நடித்து உலக அளவில் கவனம் பெற்றவர். இவர் ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீ மேக்கில் நடிக்கிறார் என்பது அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.