scorecardresearch

என்னவொரு சமூக அக்கறை.. நீங்கதான் உண்மையான கலைஞன்.. மோகன் ஜிக்கு பேரரசு பாராட்டு

பகாசூரன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மோகன் ஜியை வெகுவாக பாராட்டியுள்ளார் இயக்குனர் பேரரசு.

Director Perarasu praised Bhagasooran movie director Mohan Ji
பகாசூரன் படம், இயக்குனரை வெகுவாக பாராட்டியுள்ளார் இயக்குனர் பேரரசு

மோகன் ஜி டைரக்ஷனில் பிப்.17ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பகாசூரன்.
செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நட்டி என்ற நட்ராஜ் முக்கிய கதாபாத்தில் வருகிறார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

இந்த நிலையில் படத்தின் சிறப்பு காட்சி திரைப்பட இயக்குனர் சங்கத்தில் திங்கள்கிழமை (பிப்.20) திரையிடப்பட்டது. படத்தை சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, நிர்வாகிகள் பேரரசு, ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் பார்த்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேரரசு பேசுகையில், “பொதுவாக மோகன் ஜி படம் ஒரு தரப்புக்கு சாதகமா உள்ளது என்ற விமர்சனம் வந்தது. ஆனால் இந்தப் படம் பெற்றோரையும், மக்களையும் சார்ந்த படம்.

அதிலும் குறிப்பாக இது பெண் குழந்தைகள் சார்ந்த படம். படத்தில் சமூக அக்கறை அதிகமாக இருக்கு. யாரு சமூக பொறுப்போடு படம் எடுக்குறாங்களோ அவங்க தான் உண்மையான கலைஞன். அப்படி பார்த்தா உண்மையான கலைஞன் தான் மோகன் ஜிதான்” என்றார்.
ஸ்மார்ட்போனும், டேட்டிங் செயலிகளும் இளம் தலைமுறை இளைஞர்களை குறிப்பாக பெண்களை எப்படியெல்லாம் சீரழிக்கின்றன என்பதே படத்தின் மையக்கரு என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Director perarasu praised bhagasooran movie director mohan ji