தமிழ் படத்தில் ரன்வீர் சிங்?
தமிழில் வேள்பாரி என்ற நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்து அதில் ரன்வீங் சிங் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த படத்தின் கதை தொடர்பான புகாரால் அந்நியன் இந்தி ரீமேக் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
இதனிடையே வேள்பாரி படத்தை 3 பாகங்களாக எடுக்க ஷங்கர் முயற்சித்து வருவதாகவும், இதில் சூர்யா மன்னர் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், தகவல் வெளியானது. ஆனால் தற்போது இந்த படத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்க்கு கதை சொன்ன லவ்டுடே இயக்குனர்
கோமாளி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், சமீபத்தில் வெளியான லவ்டுடே படத்தின் மூலம் நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார். தற்போது லவ்டுடே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். பிரதீப ரங்கநாதனுக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படம் தொடர்பான நேர்காணலில் விஜய்க்கு கதை சொன்னது குறித்து கேட்டபோது, ஆமாம் விஜய்க்கு கதை சொல்லியிருக்கேன். ஆனா இப்போ அதை பற்றி பேசினால் பப்ளிசிட்டிக்காக பேசுவதாக சொல்வார்கள் என்று கூறியுள்ளார்.
லால் சலாம் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகர்?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில வருட இடைவெளிக்கு பிறகு லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. விக்ராந்த் விஷ்னு விஷால் ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். இதனிடையே இந்த படத்தில் விஷ்னு விஷால் கேரக்டரில் நடிக்க முதலில் அதர்வா தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் அதிக சம்பளம் கேட்டதால் அவரை விட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஷ்னு விஷாலை கமிட் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து 2 தமிழ் படங்களில் கமிட் ஆன தெலுங்கு நடிகர்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர் சுனில் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு வெளியான அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் மங்களம் சீனு என்ற வில்லன் ரோலில் சுனில் தானா என்று அடையானம் காண முடியாத கெட்டப்பில் நடித்திருந்தார். இந்நிலையில் சுனில் தற்போது அடுத்தடுத்து 2 தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார். ராஜூ முருகன் இயக்க்தில் கார்த்தி நடித்து வரும் ஜப்பான், சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் மாவீரன் ஆகிய படங்களில் சுனில் நடித்து வருகிறார்.
படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஒடிடி வெளியீடு?
ஒடிடி தளங்கள் வந்ததில் இருந்து திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல் திரையரங்கில் ஒரு படம் வெளியான 4 வாரங்களில் அதை ஒடிடி தளத்தில் வெளியிடுவதால் ரசிகர்கள் காத்திருந்து 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடி தளத்திலேயே படத்தை பார்க்கின்றனர். இதனால் தியேட்டர் கலெக்ஷன்ஸ குறைவதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே திரைப்படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஒடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil