லிப் சிங்க் ஆகல, ஒன்ஸ்மோர்; எம்.ஜி.ஆரிடம் கேட்ட ரஜினி பட இயக்குனர்: என்ன தைரியம் பாருங்க!

உன்னைப்போல் கூர்மையாகக் கவனிக்கும் மனிதர் யாரும் இல்லை என்று எம்.ஜி.ஆர் பாராட்டியதை நேர்க்காணல் ஒன்றில் இயக்குநர் பி.வாசு நினைவுக்கூர்ந்தார்.

உன்னைப்போல் கூர்மையாகக் கவனிக்கும் மனிதர் யாரும் இல்லை என்று எம்.ஜி.ஆர் பாராட்டியதை நேர்க்காணல் ஒன்றில் இயக்குநர் பி.வாசு நினைவுக்கூர்ந்தார்.

author-image
WebDesk
New Update
p.vasu mgr

டப்பிங் கலைஞராகத் தொடங்கி, இயக்குநராகவும் நடிகராகவும் உயர்ந்த பி. வாசு மன்னன், சந்திரமுகி, உழைப்பாழி, சின்னத்தம்பி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் எம்.ஜி.ஆர் உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் கூறியுள்ளார். பி. வாசு, தனது அனுபவங்களைப் பகிரும்போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அசாத்தியமான கூர்மையையும், தொழில் பக்தியையும் பற்றியும் அவர் கூறி இருந்தது டாக்கீஸ் திரை யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் அதை பற்றி பார்ப்போம். 

Advertisment

சூட்டிங் ஸ்பாட்டில் நடைந்த அன்பவம் குறித்து அவர் கூறினார். ஒருமுறை, 'கண்ணழகு சிங்காரிக்கி' என்ற பாடலின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது எம்.ஜி.ஆர் ஒரு டிராலியில் அமர்ந்தவாறு நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு முடிந்து எம்.ஜி.ஆர் தன் நாற்காலியை நோக்கி நடந்து செல்லும் போது, பாடலின் உதட்டு அசைவில் ஒரு சிறிய தவறை பி. வாசு கவனித்தார். ஆனால், அவர் எம்.ஜி.ஆரிடம் நேரடியாகப் பேசத் தயங்கினார். அதனால், பி. வாசு சத்தமில்லாமல் தன் உதடு அசைவுகளை சரிசெய்யுமாறு சைகை செய்தார். பின்னால் நடந்து சென்றுகொண்டிருந்த எம்.ஜி.ஆர், பி. வாசுவின் சைகையை கவனித்து, உடனே தனது சைகை மூலமாகவே மீண்டும் ஒரு ஷாட் எடுக்குமாறு கூறினார்.

மீண்டும் படப்பிடிப்பு தொடங்க, பி. வாசு பதட்டத்துடன் உதட்டு அசைவுகள் இப்போது சரியாக உள்ளதா என கவனித்துக்கொண்டிருந்தாராம். அப்போது எம்.ஜி.ஆர், பி. வாசுவிடம் உதட்டு அசைவுகள் இப்போது சரியாக உள்ளதா எனக் கேட்க, பி. வாசுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்கு பின்னால் நடந்த ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆர் எப்படி கவனித்தார் என அவர் யோசித்தார். எம்.ஜி.ஆர் அப்போது சிரித்தவாறே, “நான் உன்னைக் கவனித்தேன். நீ உதட்டு அசைவில் இருந்த தவறை கவனிப்பதை நான் கவனித்தேன். உன்னைப்போல் இவ்வளவு கூர்மையாக கவனிக்கும் மனிதர் வேறு யாரும் இல்லை” என்று கூறினார்.

Advertisment
Advertisements

ஒரு படப்பிடிப்பில், தனது கதாபாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் இவ்வளவு கூர்மையாகக் கவனித்ததோடு மட்டுமல்லாமல், தனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு கலைஞனின் சிறிய சைகையையும் கவனிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு இருந்த ஒருமைப்பாடும், தொழில் பக்தியும் வியப்பிற்குரியது. ஒரு நடிகராகவும், இயக்குநராகவும், தலைவராகவும் அவர் பெற்ற வெற்றிக்கு இதுவே முக்கிய காரணம் என்பதை பி. வாசுவின் அனுபவம் நமக்கு உணர்த்துகிறது.

Mgr

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: