பாட்டு படித்ததால் கட்டிவைத்து சாட்டையால் அடித்த அப்பா; தனது திறமையால் பதிலடி கொடுத்த மகன்; தேவயானி கணவர் ஃப்ளாஷ்பேக்!
சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் நடிகை தேவயானியின் மகள் இனியாவை சப்போர்ட் செய்ய அவரது தந்தையும் இயக்குநருமான நிகழ்ச்சிக்கு ராஜகுமாரன் வந்திருந்தார்.
சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் நடிகை தேவயானியின் மகள் இனியாவை சப்போர்ட் செய்ய அவரது தந்தையும் இயக்குநருமான நிகழ்ச்சிக்கு ராஜகுமாரன் வந்திருந்தார்.
பாட்டு படித்ததால் கட்டிவைத்து சாட்டையால் அடித்த அப்பா; தனது திறமையால் பதிலடி கொடுத்த மகன்; தேவயானி கணவர் ஃப்ளாஷ்பேக்!
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களைத் தாண்டி, ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சரிகமப சீனியர்ஸ் சீசன் 5'.
Advertisment
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டிருக்கும் நடிகை தேவயானியின் மகள் இனியாவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான ராஜகுமாரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது, தனது திரையுலகப் பயணம் குறித்த நெகிழ்ச்சியான நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
ராஜகுமாரன், தன் சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது, இசை மீது தனக்கிருந்த தீராத காதலை உருக்கமாக விவரித்தார். "ஒவ்வொரு வாரமும் சந்தைக்குச் சென்று பாடல் புத்தகங்கள் வாங்குவதற்காக 5 பைசாக்களைச் சேமிப்பேன். கிட்டத்தட்ட 200 பாடல் புத்தகங்களைச் சேகரித்து, வீட்டில் யாருக்கும் தெரியாமல் பரண் மீது ஒளித்து வைத்திருந்தேன்," என்று அவர் கூறினார்.
ஒருநாள் எனது தந்தை அந்தப் பாடல் புத்தகங்களை கண்டுபிடித்துவிட்டதால், அவரை வீட்டிற்குள்ளேயே கட்டிவைத்து சாட்டையால் கடுமையாக அடித்ததாகக் கூறி, தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இசை மீதுள்ள காதல் தனக்கு வலியைத் தந்தாலும், அது தன்னை விட்டு போகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதே சந்தையில், தான் இயக்கிய "நீ வருவாய் என" திரைப்படத்தின் பாடல் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். சிறுவயதில் பாடல் புத்தகங்களுக்காக அடி வாங்கிய அதே இடத்தில், தான் இயக்கிய படத்தின் புத்தகம் விற்பனையாகுவதைப் பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Advertisment
Advertisements
"ஒரு காலத்தில் நான் நுழைய விரும்பிய மேடையில், இன்று இசைப் போட்டியின் நடுவராக நிற்கும் இந்த நிலைக்கு வருவதற்குள் சினிமாவில் நான் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன்," என்று அவர் கூறியபோது, அரங்கத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.