திரைப்பட உலகில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி பேசினால், அது ஒட்டுமொத்த திரையுலகமும் உற்றுநோக்கும் செய்தியாகத்தான் இருக்கும். அவர் இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'ஆர்,ஆர்.ஆர்' போன்ற பிரம்மாண்ட பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனாலும் சமீபத்தில் எக்ஸ் (X) தளத்தில் ஒரு சிறிய பட்ஜெட் தமிழ் திரைப்படத்தை ராஜமௌலி புகழ்ந்து பேசியுள்ளார். இது திரையுலகையும், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பல ஆண்டுகளாக தனக்குப் பிடித்தமான சினிமா அனுபவத்தை அளித்த அந்த திரைப்படம் எது? அதுதான் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குனரான அபிஷன் ஜீவிந்த் இயக்கிய 'டூரிஸ்ட் பேமிலி' யாரும் எதிர்பாராத ஒரு வெற்றிப்படமாக மாறியுள்ளது. சூர்யாவின் 'ரெட்ரோ' மற்றும் நானியின் 'ஹிட்: தி தேர்ட் கேஸ்' போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியான நிலையிலும், 'டூரிஸ்ட் பேமிலி' படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/yMLZXxdGcEaVZd5G3ism.jpg)
இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்னவென்றால், எஸ்.எஸ். ராஜமௌலியே சமூக வலைத்தளத்தில் இப்படத்தைப் புகழ்ந்து கருத்து தெரிவித்ததாகும். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இதயம் தொடும் மற்றும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த ஒரு அற்புதமான சினிமா அனுபவம்," என்று ராஜமௌலி தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அபிஷனின் எழுத்து மற்றும் இயக்கத்தையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். "நிச்சயமாக பார்க்க வேண்டிய படம்," என்று அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார்.
எஸ்.எஸ்.ராஜமெளலியின் இந்த வார்த்தைகள் உடனடியாக இப்படத்திற்கு தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுத் தந்தது. இந்த அங்கீகாரம் அபிஷன் ஜீவிந்த்துக்கு நம்ப முடியாத ஒரு கனவு போல இருந்தது. அந்த ஆச்சரியத்தில் இருந்து இன்னும் மீளாத அவர், தனது திரைப்படங்களால் தனக்கு உத்வேகம் அளித்த அதே ராஜமௌலி தனது படத்தைப் பாராட்டியதை நம்ப முடியாமல் உணர்ச்சிவசப்பட்டார். "இந்த சிறுவனின் கனவை நீங்கள் பெரிதாக்கி விட்டீர்கள்," என்று அந்த இளம் இயக்குனர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னணி நடிகர் தனுஷ் ஆகியோரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் கதை சொல்லும் திறனைப் பாராட்டியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் படங்களை விட சிறந்த கதைதான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளது. இப்படத்தின் கதாபாத்திரங்களும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
சசிகுமார் மற்றும் சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஒரு குடும்பத்தை மகிழ்விக்கும் நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் நிறைந்த திரைப்படம். யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார், அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்,