தொட்டா சிணுங்கி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் தேவயாணி. 1990 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த தேவயாணி தன்னை வைத்து இயக்கிய இயக்குநரான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கமல்ஹாசன், விஜய், அஜித் என உச்சக்கட்ட நடிகர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்தவர் தேவயாணி. இவருடைய சாந்தமான அமைதியான முகமும் கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழும் இவருக்கென தனியே ஒரு ரசிகர் கூட்டத்தைப் பெற்றுத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ராஜகுமாரன் - தேவியானி ஜோடியின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினருக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்ததாக பலரும் பேசியுள்ளார்கள்.
ராஜகுமாரன், சூரியவம்சம் திரைப்படத்தில் அசோசியேட் டைரக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த சமயத்தில் தேவையானிக்கு ராஜகுமாரன் தான் டயலாக்கெல்லாம் சொல்லி கொடுப்பாராம். நிமிந்து கூட பார்க்க மாட்டாராம்.
பொதுவாகவே நடிகைகளை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில் ராஜகுமாரன் தனித்து இருந்தது தேவையானிக்கு மிகவும் பிடித்துப்போனதாம். மறுபக்கம் ராஜகுமாரனும் தேவையானியை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார்.
நல்ல பீக்கில் இருக்கும் சமயத்தில் திருமணம் தேவையா, அதுவும் ஒரு படம் எடுத்த இயக்குனரோடு, என்று குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, ஒரு நாள் இரவில் தி நகரில் உள்ள தனது வீட்டில் கேட் ஏறி குதித்து குடும்பத்தினருக்கு தெரியாமல் திருத்தணிக்கு சென்று, அங்கு ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டாராம் தேவையானி.
இவர்கள் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டது வேறுயாருமில்லை தற்போது மகாராஜா படத்தில் வில்லனாக மிரட்டிய சிங்கமுத்து தான்.
தேவையானியும், ராஜகுமாரனும் திருமணம் முடிந்த கையோடு இயக்குனர் விக்ரமனின் வீட்டில் தஞ்சமடைந்தார்களாம். பின்னர் விக்ரமன் தான் தேவையானியின் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்திருக்கிறார்.
பின்னர் தன் வீட்டின் அருகேயே ஒரு வீட்டை பிடித்து அங்கு அவர்களை தங்க வைத்திருக்கிறார் விக்ரமன். அதன் பின்னர் குடும்பம் நடத்தி இன்று அழகான இரண்டு பெண் குழந்தைகளோடு ஹாப்பியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இப்போது ஒரு சமீபத்திய நேர்காணலில் உங்களுக்கே சண்டை வந்தால் எப்படி சமாளிப்பீர்கள் என்று ராஜ்குமாரிடம் ஆங்கர் கேட்ட போது அவர் சிறிது கொண்டே, "ந திருமண நாள் அன்றைக்கே அவரின் (தேவையணி) காலில் விழுந்துவிட்டேன்.
திருமண சாங்கியங்களின் போது தேவையணி என் காலில் விழுந்தார், அதையடுத்து அப்படியே நானும் விழுந்துவிட்டேன்" என்று கூறினார்.
இதை அவர் சொன்னவுடன் தேவையணி வெட்கப்பட்டு சிரித்தார். இந்த நிகழ்வு அவரின் காதலின் ஆழத்தை காட்டுகிறது