அடுத்தடுத்து கொரோனா மரணங்கள்… இயக்குனர் ராஜூ முருகன் குடும்பத்தில் சோகம்!

பிரபல இயக்குநர் ராஜூ முருகனின் சகோதரர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலக நட்சத்திரங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Director Raju Murugan Brother Guru Dies of Corona : கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக, தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது தமிழ் திரையுலக நட்சத்திரங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

கடந்த வாரங்களில், கில்லி பட புகழ் மாறன், இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, நிதீஷ் வீரா ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்து பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரபல இயக்குநர் ராஜூ முருகனின் சகோதரர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலக நட்சத்திரங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி ஆகிய வெற்றித் திரைப்படங்களின் இயக்குநர் ராஜூ முருகனின் அண்ணன் குரு எனும் குமரகுருபரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கொரோனாவுக்கான தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். குரு பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வந்தார். இதற்கு முன்னதாக, பலபிரபல ஊடகங்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குருவின் மரணத்திற்கு, திரையுலக நட்சத்திரங்களும், ஊடகத் துறை சார்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஊடகம் மற்றும் திரைப்படம் மூலமாக ரசிகரக்ள் பலரின் மனம் கவர்ந்த நட்சத்திரங்களும், அவர்களின் குடும்பத்தாரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தொடர்ந்து உயிரிழந்து வருவது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Director raju murugan brother guru dies of corona cinema news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com