Advertisment
Presenting Partner
Desktop GIF

மாமன்னன் படத்தை பார்க்கலாமா வேண்டாமா என இருக்கிறேன் - இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்

மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை. மாமன்னன் படத்தை எல்லாம் சொல்வதைப் பார்த்தால் பார்க்கலாமா வேண்டாமா என்று உள்ளது என கோவையில் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Director RV Udhayakumar comment on Mamannan movie, மாமன்னன் படத்தை பார்க்கலாமா வேண்டாமா என இருக்கிறேன், இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், Director RV Udhayakumar, Mamannan movie, RV Udhayakumar, Dalit Cinema, Tamil Cinema, mari selvaraj, udhayanidhi

இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்

மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை. மாமன்னன் படத்தை எல்லாம் சொல்வதைப் பார்த்தால் பார்க்கலாமா வேண்டாமா என்று உள்ளது என கோவையில் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்தார்.

Advertisment

கோவை ஆ.டிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சுப்பீரியர் கிங்ஸ் அமைப்பின் சார்பில் சமூக நல விழிப்புணர்வு சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தேவைக்கு அதிகமாக நீரை பயன்படுத்துவது, அதிகப்படியான பிளாஸ்டிக் பயன்பாடு, பேருந்துகளில் பாதுகாப்பாக பயணம் செய்ய புதிய தொழில்நுட்பம் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வாக பேசப்பட்டது.

இந்த செய்தியாளர் சந்திப்புக்கு சிறப்பு விருந்தினராக வந்த இயக்குனர் ஆர்.வி உதயகுமார் கூறியதாவது:

தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களால் எவ்வளவு கழிவுகள் உருவாகிறது. இதை தவிர்க்க வேண்டும். பாட புத்தகத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த தகவல்களை தமிழக அரசு போடலாம்.

அதேபோல, நீர் மேலாண்மை தேவையாக உள்ளது. கிழக்கு வாசல் படம் பாத்தீங்களா. அதை பாருங்க. சினிமா என்பது வேறு அரசியல் என்பது வேறு. சாதியை வைத்து அரசியல் பண்ண வேண்டாம். அரசியல்வாதிகள் சாதியை வைத்து அரசியல் பண்ணுகின்றனர். அரசியல் தலைவர்களும் சாதியை வைத்து அரசியல் செய்கின்றனர்.

சினிமாவில் சாதி கிடையாது. எங்க ஊரில் சின்ன கவுண்டர் இருந்தார். அவரைப் பத்தி படம் எடுத்தோம். அதனால் கவுண்டர்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்பது அல்ல.

கடவுளைப் பார்த்தால் விபூதி எடுத்து பூசி கொள்கிறீர்கள். வாழும் கடவுளின் விபூதியை எடுத்து பூசி கொள்கிறேன் அவ்வளவுதான். ஒரு சிறந்த மனிதனின் காலடியை பின்பற்றுதல் என்ன தவறு. நான் காந்தியை வழிபடுகிறேன். எங்க ஊரில் ஒரு காந்தி இருக்கான் அவனை கும்பிடுகிறேன். இதில் என்ன தவறு. இல்லாத விஷயத்தை சொல்லவில்லை.

கதையா பாருங்க. கருத்த பாருங்க. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் வேதனையை வெளிப்படுத்தும் வசனங்கள் உள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் கவுண்டர் வீட்டில் போய் பொண்ணு கேட்டதால், அதில் அடித்ததால் கதாநாயகனின் அம்மா இறந்து விடுகிறார்.

அந்த படத்தின் வசனத்தில் கார்த்திக் ஒரு டயலாக் பேசுவார். நீ என்னையா பெரிய மேல்படி மேல்படி. என் ஆத்தாவ கொன்னுட்டீங்க. உன் சாதியை வைத்து என் ஆத்தா உயிரை திருப்பி கொடுக்க முடியுமா என கார்த்திக் கேட்பார். அந்த வசனத்தையும் நான் தான் எடுத்தேன். என்னுடன் படித்தவர்கள் எல்லா சமுதாயத்தினரும் என்னுடன் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது யார் என்ன சாதி என்று தெரியாது இன்னைக்கு தெரியப்படுத்துகின்றனர்.

மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை. மாமன்னன் படத்தை எல்லாம் சொல்வதைப் பார்த்தால் பார்க்கலாமா வேண்டாமா என்று உள்ளது. எதுக்கு பார்த்துவிட்டு அப்புறம் கேள்வி கேட்பீர்கள். சினிமா மனிதனை திருத்துவதற்கான ஆயுதமாக இருக்க வேண்டும் கெடுப்பதற்கான ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று திரைப்பட இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசினார்.

இதைத்தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்து, இதில் பேருந்துகளில் நெரிசலான நேரங்களில் புதிய தொழில் நுட்ப வடிவிலான இருக்கைகளை பயன்படுத்துவதால் அதிக இட வசதி கிடைப்பதுடன் நெரிசலான ஆபத்தான பயணங்களை தவிர்க்க இயலும் எனவும்

மேலும், அன்றாடம் பயன்படுத்தும் நீரின் அளவை குறைப்பது,அவற்றை மீண்டும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை ஒவ்வொரு வீட்டிலும் எவ்வாறு குறைத்து பயன்படுத்தலாம் என்பது குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆலோசனைகளை தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி. ரஹ்மான்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment