90 களில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 70 மேற்பட்ட படங்களை இயக்கிய எஸ்.ஏ.சி, தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு கன்னட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும் வருகிறார்.
Advertisment
இந்தநிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்து வருகிறார். இதில் முதலில் தான் உதவி இயக்குநராக இருந்த தருணம், தனது திருமண வாழ்க்கை, தனது மகன் மகள் பிறப்பு, மற்றும் மனைவியுடன் தனது வாழக்கை பயணம் உள்ளிட்ட பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில். தனது முதல்பட வாய்ப்பு மற்றும் இந்த படத்திற்கு நடிகர் விஜயகாந்தை தேர்வு செய்தது எப்படி என்பது தொடர்பாக பேசியிருந்தார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில். தனது முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை படத்தின் வெளியீடு மற்றும் ரசிகர்களின் வரவேற்பு குறித்து பேசியுள்ளார்.
இந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில், தம்பி கொலைகாரன். அக்கா போலீஸ். தம்பியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று அக்கா முயற்சி செய்கிறார். ஆனால் நான் தான் கொலை செய்கிறேன். நீ போலீஸ் முடிந்தால் சட்சியுடன் என்னை கைது செய்து கோர்ட்டில் நிறுத்து நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சவால் விடுகிறார் தம்பி அப்போது இடைவேளை.
Advertisment
Advertisements
அதுவரை படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர் அப்போ தியேட்டத்தில் விஐபி இருக்கையில் நான் எனது உதவியாளர்கள் விஜயகாந்த, அவரது நண்பர் இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்ட பலர் பார்த்துக்கொண்டிருந்தோம். இடைவேளையின்போது ரசிகர்கள் கைதட்டியதை பார்த்து நானும் விஜயகாந்தும் கண்ணீர் வடித்தோம். அப்போது விஜயகாந்த் நடித்து ஒரு படம் வெளியாகாமல். இருந்தது. இதனால் உணர்ச்சி மிகுதியில் இருவரும் அழுதோம்.
வெற்றியை கண்ணில் பார்த்துவிட்டோம். அதன்பிறகு கேண்டீன் அருகில் ரசிகர்கள் ரசிகர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை கேட்க போனோம். அப்போது நான்தான் இயக்குநர் என்று யாருக்கும் தெரியாது என்பதால் நான் அப்படியே சென்றேன். ஆனால் விஜயகாந்த் முகத்தை மூடிக்கொண்டு வந்தார். அப்போ ரசிகர்கள் படத்தை பாராட்டி பேசிக்கொண்டிருந்தனர் என்று கூறியுள்ளார்.
மேலும் பல தகவல்களை பேசியுள்ள இந்த வீடியோ பதிவு தற்போது யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“