Advertisment

ரஜினிகாந்த் ஓ.கே சொல்லிட்டாரு... பாக்யராஜை கன்வின்ஸ் பண்ண கஷ்டப்பட்டேன்: எஸ்.ஏ.சி

ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டா பண்ணா எப்படி இருக்கும் என்று ரஜினியிடம் கேட்டோம். அதற்கு அவர் நல்லா இருக்கும்னு நீங்க நினைத்தால் பண்ணுங்க சந்திரசேகர் என்று அவ்ளோ ஈஸியா சொன்னார்.

author-image
WebDesk
New Update
ரஜினிகாந்த் ஓ.கே சொல்லிட்டாரு... பாக்யராஜை கன்வின்ஸ் பண்ண கஷ்டப்பட்டேன்: எஸ்.ஏ.சி

80 - 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், தான் ரஜினியை வைத்து இயக்கிய நான் சிகப்பு மனிதன் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக யார் இந்த எஸ்.ஏ.சி. என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்து வருகிறார். இதில் முதலில் தான் உதவி இயக்குநராக இருந்த தருணம், தனது திருமண வாழ்க்கை, தனது மகன் மகள் பிறப்பு, மற்றும் மனைவியுடன் தனது வாழக்கை பயணம் உள்ளிட்ட பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் முதன் முதலில் இயக்கய ரீமேக் படம் மற்றும் ரஜினியை வைத்து இயக்கிய முதல் படமான நான் சிகப்பு மனிதன் படம் குறித்து பேசியுள்ளார்.

கேரளாவின் படகு இல்லத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில், பேசும் எஸ்.ஏ.சி, எனது படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்துதான் பழக்கம். ஆனால் முதல் முறையாக ஆச்கி ஆவாஸ் என்ற படத்தை தமிழில் நான் ரீமேக் செய்தேன். ரஜினிகாந்தின் முதல் இந்தி படமான அந்தா கானும் என்ற படத்தை தயாரத்த கே பிச்சர்ஸ் நிறுவனம் ரஜினியுடன் இணைந்து படம் பண்ண டேட்ஸ் கேட்டுகொண்டே இருந்துள்ளனர்.

அப்போது ஒருநாள் ரஜினி பாம்பேயில், ஆச்கி ஆவாஸ் படத்தை பார்த்துள்ளார். இந்த படம் அவருக்கு பிடித்து போகவே உடனடியாக கே. பிச்சர்ஸ் பூர்ண சந்திரராவ்-க்கு போன் செய்து இந்த படம் குறித்து பேசி இதை தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் அந்த கதையை தமிழுக்கு ஏற்ற மாதிரி ஒரு சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட அந்நிறுவனம் உடனடியாக ரஜினிக்கு அட்வான்ஸ கொடுத்துள்ளனர்.

எல்லம் முடிந்து இந்த படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி வரும்போது இந்த படம் சட்டம் தொடர்பாக வருகிறது. இதை எஸ்.ஏ.சி இயக்கினால் நன்றாக இருக்கும் என்று ரஜினிதான் கூறியுள்ளார். அப்போது தாயாரிப்பு நிறுவனம் என்னை தொடர்புகொண்டபோது நான் பாம்பேயில் ஒரு இந்தி பட ஷூட்டிங்கில் இருக்கிறேன். அதன்பிறகு தயாரிப்பு நிறுவனம் ரஜினிக்கு போன் செய்து சந்திரசேகர் பாம்பேயில் தான் இருக்கிறார் நீங்கள் பேசுங்கள் என்று கூறியுள்ளனர்.

உடனே திடீர்னு ரஜினி எனக்கு போன் செய்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாமா என்று கேட்டார். கண்டிப்பா பண்ணலாம் சார் என்று சொன்னேன். அப்போது ஆச்கி ஆவாஸ் படம் பாருங்க என்று சொன்னார். ரொம்ப சீரியஸா பண்ணிருக்காங்க இதை நமக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் கமர்ஷியலா பண்ணுங்க என்று சொன்னார். அதன்பிறகு நீங்க சென்னை போன உடனே பூர்ண சந்திரராவ் பாருங்க அவர’ சொல்வார் என்று சொன்னார்.

அவர் சொன்னபடி நான் பூர்ண சந்திரராவ் போய் பார்த்தேன். ரஜினிகாந்த் எல்லாம் பேசவிட்டார். ஸ்கிரிப்ட் ரெடியாக இருக்கு என்று அவர் சொன்னார். அப்போது 10 நாட்கள் கழித்து ஸ்கிரிப்டில் மாற்றம் செய்துவிட்டு வந்து பார்க்கிறேன் என் சொல்லிவிட்டு வந்தேன். அதே மாதிரி 10 நாட்கள் கழித்து போய் அவரை பார்த்து சொன்னேன். இதற்கு நான் சிகப்பு மனிதன் என்று டைட்டில் வைத்துவிட்டேன்.

இந்த படத்தில் ரஜினியை ராபினஹூட் என்று சொல்வார்கள். அவரை கைது செய்யும் போலீசும் சீரியஸானவர். இதை ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டா பண்ணா எப்படி இருக்கும் என்று ரஜினியிடம் கேட்டோம். அதற்கு அவர் நல்லா இருக்கும்னு நீங்க நினைத்தால் பண்ணுங்க சந்திரசேகர் என்று அவ்ளோ ஈஸியா சொன்னார். அடுத்து கட்டமாக 2-வது ஹீரோவாக யாரை போடலாம் என்று பேசப்பட்டது.

அப்போது பூர்ண சந்திரராவ் பாக்யராஜ் என்று சொன்னார். அதன்பிறகு அவரையும் பிக்ஸ் பண்ணிட்டாங்க. அங்கதான் எனக்கு ஒரு சிக்கல் வந்தது. ரஜினியிடம் டபுள் ஹீரோ சப்ஜக்ட் என்று சொல்லி ஓகே வாங்கிவிட்டேன. ஆனால் பாக்யராஜிடம் ஒவ்வொரு நாளும் போகும்போது அவரை கன்வின்ஸ் பண்ண ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. கடைசியில் அவரு ஸ்கிரீன்ப்ளே பண்ண எங்களுடன் வந்தார். தினமும் அவருடன் சேர்ந்து இந்த ஸ்கிரிப்டை ஒரு ஹியூமர் பேஸ்ல டெவலப் செய்து ஷூட்டிங் போனோம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment